பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 45 தெளிவாகத் தெரிகிறது. ஆதிமனிதர் விளை நிலம் சார்ந்த தானியங்களை விதைத்து, விளைச்சலைப் பெருக்கி வண்மை காண, இயற்கை அன்னையைத் தொழுது நலம் விழைந்து செய்யும் சடங்குகளைப் பெண்ணே முன்நின்று நிறைவேற்றினாள் என்பதற்கான ஆதாரங்கள் இன்றளவும் தொடர்ந்து வந்திருக்கின்றன. முதல் மருத்துவரும் பெண் ணாகவே இருந்திருக்கிறாள். இனி ருக் வேதம் கூறும் பெண் தெய்வங்களைப் பார்ப்போம். வாக் என்று ஒரு தேவதையைப் பற்றிய பாடல் வருகிறது. ‘வாக் என்ற பெயரில் ஒரு ரிஷியே (பெண்) இருப்பதாகவும் அவளே இப்பாடலின் ஆசிரியை என்றும் ஒரு குறிப்பு இருக்கிறது. வேதப் பாடல்களின் ஆசிரியைகள் என்ற குறிப்பைப் பற்றி ஐயத்துடக்கிடமான விவாதங்களும், இருக்கின்றன. எனினும் விவாதங்களைத் தவிர்த்து பாடலின் தேவதையைக் கவனிப்போம். வாக் ஒலிக்குரிய தேவதை, வானையும் மண்ணையும் கடந்து பிரபஞ்சம் முழுவதையும் தன் ஆக்ஞையினால் ஒன்றுபடுத்தும் ஒலிக்குரிய தெய்வம். தத்துவத்துக்கு இவளே மூல தேவதையாம். சக்தியின் மூலாதாரமான ஒலியின் கூட்டுறவின்றி, கடவுளின் எந்தப் படைப்பும் பூரணமாக நிறைவேறுவதற்கில்லையாம். எனவே தெய்வங்களுக்கெல்லாம் மேலான நாயகியாக இவள் போற்றப்படுகிறாள். பிந்தைய சக்தி வழிபாடு நெறிக்கு ஆதாரமான தேவதை இவளேயாம். இலா-ஸ்ரஸ்வதி-பாரதி என்று மூன்று தேவதைகள் மேலாம் இன்பத்தையும் நலன்களையும் பயக்கும் தெய்வங்களாகக் குறிப்பிடப்படுகின்றனர். இலா என்ற தேவதை, வேள்வி செய்வதற்கான விதிமுறைகளை முதன்முதலாக மாந்தருக்குப் போதிக்கும் ஆசான் என்று போற்றப்படுகிறாள். இலா என்ற பெயருக்கே வெண்ணெய்