பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 65 சமுதாய நலன் கருதிச் செய்யப்படும் வேள்விக்காகவே அப்பொருள் செலவிடப்பட்டது. முதல் வருணத்தவருக்குச் சுயநலம், பொருள் சேமிப்பு இருக்கக் கூடாது. சமுதாயத்தின் சொத்து இந்த வர்க்கம். இந்த வர்க்கத்தினருக்கு அனைத்து மக்களும் கல்விக் கண்ணைப் பெற, உபநயனம்’ செய்து வைக்கும் அருங் கடமையும் உண்டு. ஏனைய மக்களுக்கும் வேள்வி புரியவும் வேதமோதவும் உரிமை இருந்தாலும், ‘உபநயனம்’ செய்து வைக்கும் ஆசான் என்ற உரிமை அந்த முதல் வருக்கத்தினருக்கே இருந்தது. இவர்கள் சமமானவர்கள் என்ற தத்துவத்தை ருக் வேதத்தின் ‘ஸம்வனன ஸூக்தம்’ என்ற பகுதியில் வரும் பாடல்கள் மிக அற்புதமாக வலியுறுத்துகின்றன, ஒரு சக்கரத்தின் ஆரக் கால்களைப் போன்று, ஒரே மையத்தில் இணைபவர்களாய் எத்தொழில் செய்தாலும் ஒரே நோக்கில் ஒரே சிந்தையில் குவிந்து குவிந்து சமமாக வாழ்விர்கள் என்று உரைக்கிறது. ஆனால், புருஷ ஸாக்தம், இதற்கு மாறான பிரிவினை களைக் கற்பிக்கிறது. ஆதிபுருடனின் முகத்திலிருந்தும், தோள்கள், தொடைகளிலிருந்தும், பாதத்திலிருந்தும் முறையே முதல், இரண்டாம், மூன்றாம் வருணத்தவர் தோன்றினர் என்று உரைக்கிறது. நான்காம் வருணத்தவர் பாதங்களில் உதித்தவராதலால், கல்வி பெறவும் கடமைகளுக்கு உரியவராகவும், தொழில் புரியவும் தகுதியற்றவர்கள். முதன் மூன்று வருணத்தவருக்கு ஊழியம் செய்து அவர்தம் கருணையில் பிழைப்பதே அவர் தருமம் என்று அறிவுறுத்துகிறது. நான்காம் வருணத்தவர் யாவர்? இவ்வினாவுக்கு மிகச் சிறந்த சமூக வரலாற்று அறிஞரான டாக்டர் அம்பேத்கார் ஒர் அகன்ற, ஆழ்ந்த ஆய்வை மேற்கொண்டு, மிக ஆச்சர்யமான ஆதாரங்களுடன் சில உண்மைகளை விளக்கியுள்ளார். கா.பெ. - 5