பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் 67 ஆரியர் வென்றாலும், தோற்றாலும் அவர்கள் பக்கம் பெண் அடிமைகள் வந்தார்கள். இந்தப் பெண்கள், வது’க்கள் என்று குறிக்கப்படுகிறார்கள். இவர்கள் ஆரிய சமுதாயத்தில் சான்றோர் மற்றும் வீரருடன் சம்பந்தம் கொள்வது தவறாகக் கருதப்படவில்லை. ‘வது’க்கள் ஆண் மக்களைப் பெற்றால், ஆரிய மனைவியருக்குச் சமமானவர்களாக உயர்ந்த மதிப்புப் பெற்றனர். இந்த அடிமைப் பெண்களின் சந்ததியினரும் கல்வியுரிமை பெற்றனர் என்பதை சாந்தோக்ய உபநிடதச் செய்தி ஒன்று விளக்குகிறது. I ஸத்யகாமன் ஓர் அடிமைப் பெண்ணின் மைந்தன். அவன் மானிடரை உய்விக்கும் மேலாம் கல்வியைப் பெற விரும்புகிறான். தாயே, எனது தந்தை யார் என்று தெரியாத நிலையில் எப்படியம்மா குருகுலத்தில் மாணவனாக இடம் பெறுவேன்?’ என்று கேட்கிறான். அதற்கு ஜாபாலி என்ற பெயருடைய அந்த அன்னை "மகனே நீ இந்த உண்மையைச் சொல்: "நான் ஜாபாலி ஸத்யகாமன். என் அன்னை தம் இளவயதில் பல எஜமானர்களுக்குப் பணியாட்டியாக இருந்தார். இதுதான் உண்மை!’ என்று நான் உரைத்ததாகச் சொல்’ என்று கூறி அனுப்புகிறாள். முனிவர். ஸத்யகாமன் கூற்றைச் செவியுற்றதும், நீ உண்மையைக் கூறியதால், மேலாம் வருணத்துக்குரியவன் தான். உனக்குக் கல்வி பயிற்றுவேன்’ என்று ஏற்றாராம். இந்தச் செய்தி அடிமையின் மைந்தனுக்குக் கல்வி யுரிமையை உறுதியாக்கினாலும், தந்தை யார் என்ற சிடுக்கு ஒன்று உபநிடத காலத்தில் தோன்றிவிட்டதை உணர்த்துகிறது. டாக்டர் அம்பேத்காரின் ஆய்வு நூல் உபநயனச் சடங்கில் மேவிய புதிய பரிமாணங்களையும் விரித்துரைக்கிறது.