பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 காலந்தோறும் பெண் வேதகாலத்து உபநயனத்தில் முப்புரி நூலைப் பற்றிய குறிப்பே இல்லை. பிற்காலத்தில்தான் முப்புரி நூல், தந்தைவழிப் பாரம்பரியம் கூறிக் கோத்திரம் உறுதி செய்யும் சடங்குகள் எல்லாம் உபநயனத்துடன் இசைந்தன. அத்துடன் உபநயனம் செய்து வைக்கத் தகுதியும், உரிமையும் பெற்ற முதல் வருணத்தாருக்கும், பெண்களுக்கும், நான்காம் வருணத்தாருக்கும் உபநயனம் செய்து வைக்கக்கூடாது; மீறிச் செய்தால் பாவத்துக்கு ஆளாவர் என்ற விதி நெறிகள் ஏன் வந்தன? வேத ஒலியைக் கேட்பதே பாவம் என்று ஒரு சாராருக்குக் கடும் ஆணையும், சொல்லி வைத்தால் கொடு நரகம் என்று இன்னொரு சாராருக்குப் பயமுறுத்தலும் யாரால், எதற்காக இந்தச் சமுதாயத்தில் புகுத்தப்பட்டன? 'ஒன்றாக நடப்பீர்; ஒன்றாகச் சிந்திப்பீர்; உங்கள் குறிக்கோள்களும் எண்ணங்களும் ஒரே மையத்தில் இணையட்டும். உங்கள் உணவு, பருகு நீர் எல்லாம் எல்லாருக்கும் உகந்ததாக இருக்கட்டும்’ என்ற சமத்துவ நெறியை எதற்காகக் குதறி எறிந்தார்கள்? முறைகேடான பிளவுகளை வலியுறுத்த, நியாயப்படுத்த, வேதத்தின் முத்திரை வேண்டும் என்று புருஷஸூக்தம் என்ற புனைவு, ருக் வேதத்தில் திணிக்கப்பட்டது. இதைத் திணித்தவர்கள், சாம்ராச்சியங்களும் அரச பதவிகளும், உடமை வருக்கப் போகங்களும் கூட்டிவிட்ட மோகங்களுக்கு அடிமைகளாகித் தீர்ந்த முதல் வருக்கக் குருமார். பிரும்மகுல ருவr என்று முதன்மைப் பதவி அனுபவித்த வசிஷ்டர், கூடித்திரிய கலத்தில் பிறந்து தன் விடாமுயற்சியினால் அந்த நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொண்ட கோசிக முனிவராகிய விசுவாமித்திரர் ஆகிய இருவரிடையே தொடர்ந்து வந்த பூசல்களும் வழக்கு வாதங்களும் அம்பேத்காரின் நூலில் ஆராயப்படுகின்றன.