பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 காலந்தோறும் பெண் அரண்கள் அமைத்து, அவை காவல் மதில்கள் என்று தெரியாமல் இருக்க, பூத்தோரணங்கள், பட்டுக் குஞ்சங்கள் கட்டி அவளை அவற்றிலேயே ஒன்றிடச் செய்தார்கள். இப்படிச் செய்தார்கள், ஆக்கினார்கள் என்று விவரிப்பதைக் கண்டு யார் செய்தார்கள் என்ற கேள்வி என்னை நோக்கி எழக்கூடும். சமுதாயத்தில் வருண பேதங்கள், மற்றும் பெண்ணடி மைத்தனம் ஆகியவற்றுக்கு அவசியம், குருமார்களால் உண்டாயிற்று. உடல் வலிமையினால் மனிதத் தொகுதிகளை திறம் பெற்றவருக்கும், அறிவு-ஆன்ம வலிமையினால் ஏற்றம் பெற்றவருக்கும், அதிகார வெறியும், பதவிப்பித்தும், சுயநலங்களும் வளர்ந்ததனால், சண்டை சச்சரவுகள், போர்கள் நிகழ்ந்தன. அதன் விளைவாகிய பழிவாங்கலே உபநயனம் மறுக்கப்பட்ட நிலை என்று கண்டோம். அந்த மேலான ஆதிக்க நிலையையும் இன்னும் உறுதியுடன் நிலைப்படுத்திக் கொள்ள, 'குரு வர்க்கம் உண்டாயிற்று. வலிமையுள்ள கூடித்திரிய அரசர்களுக்குக் குருவாகப் பதவி வகிப்பவர்கள், அரசனுக்கும் மேலான மதிப்பையும் நலன்களையும் பெற்றிருந்தார்கள். அரச பரம்பரையில் உதித்த விசுவாமித்திரர், அதனினும் மேலான பதவியாம் "பிரும்ம ரிஷி’ப் பட்டத்தைக் கேட்க, கடுஞ்சாதனை புரிந்தார் என்பது யாவரும் அறிந்த புராண வரலாறு. இத்தகையை குருபீடங்கள், கத்தியின்றி, இரத்தமின்றி, மக்கள் தொகுதிகளைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவர ஏதுவாக பலப்பல புதிய உண்மைகளை, ஆன்மீகக் கருத்துக்களை அள்ளித் தெளிக்க வேண்டி இருந்தது. அவற்றில் முக்கிய மானது, இறந்தபின் மறு உலகம் என்ற கண்டுபிடிப்பு. மரித்தவர் மீண்டும் பிறவி எடுப்பார், என்று மரணத் துக்குப்பின் உள்ள ஒரு வாழ்வைப் பற்றிய நம்பிக்கைகள் கற்பிக்கப்பட்டன.