பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 காலந்தோறும் பெண் வதற்கில்லை. அதர்வ வேதம் ஆரியர்களின் இன்னொரு பிரிவினரை, முன்னும் பின்னுமாக வந்தவரைச் சார்ந்தது என ஊகிக்கலாம். எனினும், பிற்காலத்தில் சமுதாய மாறுதல்கள், அதர்வ வேதத்தில் பரவலாகக் காணப்படும் முக்கியமான சடங்குகள் வாயிலாக, பெண்ணின் கீழ்முக இறக்கம் உறுதிப்படுத்தப்படுகிறது. 11. முன்னுச்சி வகிற்றுக் குங்குமம் தீற்றல் - அடிமைப் பெண் அடையாளம் வடஇந்தியாவில் உள்ள பழங்குடி இனத்தாரில் "ஒரான்’ என்ற இனத்தாரிடையே ஒரு நாடோடிக் கதை வழங்கி வருகிறது. இந்த "ஒரான் இனத்தாரிடையே நான்கு பேர் இளமைப் பருவந் தொட்டே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். அவர்களில் ஒருவன் எலிந்துாரம் எனப்படும் குங்குமம் விற்பவன்; ஒருவன் துணி நெய்யும் தொழில் செய்பவன்; ஒருவன் மரச் சிற்பச் செதுக்கு வேலையில் தேர்ச்சி பெற்றவன்; எஞ்சியுள்ள இன்னொருவன் பொன் நகைகள் செய்யும் மரபில் பயின்றவன். இந்த நால்வகைத் தொழிற் கலைஞர்களுக்கும் கிராமத்தில் ஒரே இடத்தில் தங்கி இருப்பதில் அலுப்பு ஏற்பட்டது. புதிய புதிய இடங்களைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். தத்தம் தொழிலுக்குரிய சாதனங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்கள். வழியில் இரவைக் கழிக்க ஒரு மாந்தோப்பில் அவர்கள் தங்கினார்கள்.