பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் * 79 இவர்கள் இவ்வாறு சச்சரவிடுகையில் அங்கொரு பெரியவர் வந்தார். அவர் நால்வரின் வாதங்களையும் கேட்டபின், இவ்வாறு தீர்ப்புக் கூறினார். “அவளை உருவாக்கிய சிற்பி, தந்தையாகிறான். ஆடை அணிவித்தவன் மூத்த தமையன் ஆகிறான். அணிகள் செய்து அலங்கரித்தவன் தாய் மாமனாகிறான்; அவளைத் தொட்டு நெற்றியில் குங்குமம் தீற்றியவனே கணவனாகும் உரிமையைப் பெறுகிறான்.” திருமணம் என்பது, ஒர் ஆண் ஒரு பெண்ணை உடமையாக்கிக் கொள்வது என்று பொருள் படுவதாக இக்கதை வலியுறுத்துகிறது. அவ்வாறு உடமைப் பொருளாக ஆக்கிக் கொள்வதற்குரிய அடையாளமே குங்குமத் தீற்றல் சடங்கென்பதும் தெளிவுறுத்தப்படுகிறது. இன்றும் வடஇந்திய மக்களிடையே குங்குமத்தீற்றல் ஒன்றே திருமணம் நிறைவேறிவிட்ட பெண்ணுக்குரிய அடையாளச் சின்னமாக இருக்கிறது. தென்னிந்தியரிடையே வழக்கில் உள்ள தாலி, அல்லது 'மாங்கல்யம் வட இந்தியத் திருமணங்களில் இல்லை. மேலும் தென்னிந்தியச் சிறுமிகள் போல், வடஇந்தியாவில் திருமணமாகாத சிறுமிகள் குங்குமப் பொட்டு அணிவதை முக்கியமாகக் கருதுவதில்லை. ஏன், அணிவதில்லை என்று கூடச் சொல்லலாம். இந்நாட்களில் அழகு அலங்காரப் பொருள்களாக மலிந்துவிட்ட பிளாஸ்டிக் ஒட்டுப் பொட்டுகள் விதிவிலக்கானவை) இவ்வழக்கைப் பற்றி நான் வேடிக்கையாகக் குறிப் பிடுகையில் வங்க எழுத்தாள சோதரி ஒருவர் என்னிடம் ஒரு தகவல் கூறினார். = “மனிதர் கூட்டம் கூட்டமாக வீடு வாசலின்றித் திரிந்த் நாட்களில், ஆங்காங்கு காடுகளில் உறங்குவதும் வேட்டையாடி