பக்கம்:காலந்தோறும் பெண்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 காலந்தோறும் பெண் எங்களைப் போன்று சோப்புத் தேய்த்துக் குளிக்கும் சிறுமி களின்மீது வெடிக்கும். “ஏண்டி சோப்பைப் போட்டுக் கரைச்சு ஜலத்தைப் பாழாக்கறே? பாவி! முகரையைப் பாரு! இதுக்கு என்ன சோப்பு வேண்டியிருக்கு? சுண்ணாம்பு நாத்தம் சொல்ல முடியலே. இத்தப் போட்டுத் துணிய வேறு தோய்க்கறதுங்க...! சனியனே! ஏண்டி தோய்க்கிறே? ஜலம் தெறிக்கறது, அத்தனையும் போச்சு! மறுபடியும் ஸ்நானம் பண்ணனும்...!” இப்படி வசைகள் தொடர்ந்துகொண்டே போகும். எங்கள் வளர்ச்சியை நானொரு நூலாக அளந்து கலி முற்றி, ஆசாரம் கெட்டு வருவதற்கான பீடைகளாக உருப்பெறுவதையும் வாயில் மென்று துப்புவார்கள். 'திமுதிமுன்னு வளர்ந்து நிக்கறது. பாவாடை, சட்டை, மேலாக்கு.கோரம்.சகிக்கலை. இப்படித்தான் பெத்தவா வளர்த்து வச்சிண்டு; கூச்ச நாச்சமில்லாம காவேரிக்கு அனுப்புவாளா? பத்து வயசாகுமுன்ன பறயன் கையிலானும் புடிச்சுக் குடுக்க வானாமோ?” இவர்களின் பார்வைத் துழாவலில் வார்த்தை அடிகளில் சுருண்டு, காவிரிக்குப் போகும் ஆசையை விடவும் முடியாமல் ஒரே ஒரு முங்கலுடன் ஒடிவந்த நாட்கள் பல. இந்த அநாதைகளின் கடுத்த முகங்களுக்குப் பின்னால் இவர்களுடைய வாழ்க்கைகளை எண்ணிப் பார்க்கும் ஆர்வம், எனக்குச் சிறிது வயது வந்த பின்னரே தோன்றியதுண்டு. என்னுடைய இரு பாட்டிமார், ஒரே அத்தை என்று நான் கண்விழித்துக் கண்ட உறவினர் இந்த வர்க்கத்தினரே. மிகச் சிறியவளாக இருந்த காலத்தில் அத்தை பாட்டி, உறவுக்காரர் இப்படி வெள்ளையும் முக்காடுமாக இருப்பார்கள் என்றே எண்ணியிருந்திருக்கிறேன். எங்கள் வீதியிலே புரோகிதக் குடும்பங்கள் பல இருந்தன. அந்தக் குடும்பங்களில் சுங்கடியோ, கொட்டடிச் சேலையோ உடுத்தக்கூடிய பிரகிருதி