பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

காலனைக் கட்டி யடக்கிய


யெல்லாம் யமதருமராஜரிடம் சொல்லவும்; அவர் கீழ்த் தானே காலன் உத்தியோகம் பூண்டுள்ளான். உலகில் நடக்கும் அநீதிகளைக் கூறிக் காலனைக் கட்டினின்றும் அவிழ்த்து விடும்படிச் சொல்லவும்” எனக் கூறி அனுப்பினர்.

நாரதரும் உடனே யமலோகஞ் சென்றனர். யமதருமராஜரைக் கண்டு முகமன் கூறினர். யமதருமராஜரும் “வாரும்! நாாதரே! என்ன விசேஷம் ! நரகலோகத்திற் சில தினங்களாகக் கூட்டமே காணோம். ஒரு பைசாசம் கூட என்னிடம் வரவில்லையே. மனிதர்களுக்குச் சாவில்லை எனச் சிவபெருமான் வரந்தந்து விட்டனரோ! காலன் யாண்டுள்ளான்? என்ன கதியாயினான்? என வினவினர். நாரதரும் “அம்மம்ம! அந்த அதிசயத்தை என்ன என்று கூறுவேன். உமது ப்ரதான மந்திரி காலப்பிரபு கடோர சித்தனது மாயை யிருக்கையிற் சிக்கி அவனது இல்லத்தி லேயே ஒரிடத் தமர்ந்து உடலது கொழுத்து உண்பதும் உறங்குவதுமாக நாள் கழிக்கின்றனர். காலனார் கட்டுண் டார் என அறிந்து இம்மானுடர் செய்யும் அநீதிக்கு அளவில்லை. மனிதனுக்கும் மாட்டுக்கும் பேதமே இல்லாதிருக்கின்றது. அறஞ் செய விரும்புவார் இலர். ஆலயந் தொழுவார் இலர். திருக் கோயில்களிலுள்ள குருக்கள் யாவரும் கோயிலுக்கு வருவாரின்றி வருவாய் குன்றி வயிற்றுக் கின்றி வாடுகின்றனர். கடோரசித்த னென்றால் காசினி முழுமையுங் கலங்குகின்றது. யாரேனும் அவனை எதிர்த்தால் காலனைக் கட்டவிழ்த்து விட்டு விடுவேன் என அச்சுறுத்துகின்றனன்” என்றனர்.