பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடோரசித்தன் கதை

9


இதைக் கேட்டனர் யமதருமராஜர். புருவம் நெறித்தனர்; கோப நகை செய்தனர்; பாசத்தையுஞ் சூலத்தையும் எடுத்தனர்; எருமைவாகனத் தேறினர்; “நாரதரே! நன்று நீங்கள் போய் வாருங்கள்” என அவருக்கு விடை யளித்துத் தாம் பூலோகத்துக்கு வந்தனர். வரும்போது பூலோகத்தில் அநேக விசித்திரங்களைக் கண்டனர். சுழற் காற்று வீசிக் கடல் கொந்தளிக்கின்றது. கப்பல்கள் பம்பரம் போலச் சுழன்று சாய்கின்றன. கப்பலிலுள்ளவர்களோ ‘அஞ்சுதல் வேண்டாம்: காலன் கட்டுண்டு கிடக்கின்றான்: சாவில்லை; நீருங் காற்றும் ஒன்றுஞ் செய்யாது’ எனக் கூறிச் சிரித்தனர். கோயில்களில் கொள்ளையிடுங் கள்ளர் மீதும், தொட்டிலிற் கிடக்குங் குழந்தையின் மீதும் இடி விழுகின்றது. “இடியே! நீ இன்னும் பத்து இடியாய்ச் சேர்ந்து எம் மீது விழுந்தாலும் எமக்குப் பயமில்லை. இறப்பு இல்லை” எனச் சொல்லி நகைத்தனர்கள் கள்ளர்கள். ‘என்குழந்தையை நீ ஒன்றுஞ் செய்ய முடியாது. என் குழங்தைக்கு நீ ஒரு வாத்தியப் பெட்டி போலும்’ என எள்ளி உரையாடினள் அக் குழந்தையின் தாய். பிறன் மனை விழைந்தான் ஒரு காமி. “ஐயோ! இது பாபமாயிற்றே” என அஞ்சினள் அக்காரிகை. “சீ! முட்டாள்! நன்னெறி ஏது? புன்னெறி ஏது? பாபம் ஏது? புண்ணியம் ஏது? சாவேது? கடவுளேது ?” என்றான் ஒழுக்கமற்ற அவ்விடன். இக்காட்சி யெல்லாம் கண்டனர் யமதருமராஜர். “நன்று! நன்று! சிரியுங்கள்; கூத்தாடுங் கள்; இன்னும் ஒரு நிமிடத்தில் உங்கள் சிரிப்புங் கெலிப்பும் மறையும்; பாருங்கள்” எனத் தமக்குள் கூறி நேராய்க் கடோரசித்தன் வீட்டுக்குள் நுழைந்தனர். காலன் தனது