பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கடோரசித்தன் கதை

15


அவர் பொருளைக் கொள்ளை யடிப்பவர்களை நானே ஒதுக்கிப் புடைத்து அவர் ஆலயங்கள் முதலியவற்றைப் புதுப்பித்து அலங்கரித்துக் கோயில் அர்ச்சகர் முதலாயினோர் தமது வேலைகளைச் சரிவர நடத்தி வரும்படிச் செய்கின்றேன் பாருங்கள்; எனக்காகச் சொல்லுகின்றேன் என நினையாதீர்கள்; பெருமாளுடைய பெருமையைக் காப்பாற்ற வேண்டித்தான் சொல்லுகின்றேன். கள்ளனைத் தொண்டனாக்கிய மாயன் பெருமாள், கடோர சித்தனைக் கனிந்த சித்தனாக்கிய கண்ணன் பெருமாள் என யாவரும் அவர் பெருமையைப் பாராட்டுவார்கள். இந்த யோசனைக்கு என்ன சொல்லுகின்றீர்கள்” என வினவினன். அதற்குச் சங்கிலிக் கறுப்பன் “நீ சொல்வது உண்மையே. ஆனால், அநேக உண்மைகள் கண்டு பிடிக்கப்பட்டு அவை தம்மால் வரும் பயனை அடைவதன் முன் கண்டுபிடிப்பவர் காலஞ் செல்கின்றனரல்லவா? அது போலவே, நீ கண்டு பிடித்த இந்த உண்மையின் பயனை நீ அடைவதற்கில்லை. இந்த யோசனை நீ இறப்பதன் முன் உனக்கு இருந்திருத்தல் வேண்டும். இப்போது இந்த யோசனையைப் பெருமாளிடஞ் சொல்ல முடியுமா? முடியாது” என்று கூறினன். “ஏன் ? நீங்கள் எனக்காகப் பரிந்து பேசினல் எம்பெருமான் இரங்க மாட்டாரா? அவர் தான் கருணாகர மூர்த்தி, பக்தவத்சல ராயிற்றே. செய்தது தவறு, பொறுத்தருளல் வேண்டும் என வணங்கினால் உடனே இரங்கி அருள் சுரக்கும் அண்ணலாயிற்றே எங்கள் லக்ஷ்மீபதி” என்றனன் கடோர சித்தன். அதற்குச் சங்கிலிக்கறுப்பன், “ஆமாம். உன் உயிர் உடலிடை இருந்து நீ அங்ஙனம் வணங்கினால் அவர்