பக்கம்:காலனைக் கட்டி யடக்கிய கடோரசித்தன் கதை.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

காலனைக் கட்டி யடக்கிய


போல, வாழ்க்கைப் போகங்களெல்லாம் மறையுந் தன்மையன. ஆத்மா அழிவில்லாதது. உன்னை யமபட்டணத்தில் விசாரிக்கும் போது தூபக்கால் சுத்தியாயிருந்ததா என்று கேட்பார்களே ஒழிய தூபக்காலில் இட்ட பொருள்கள் வாசனை வீசினவா எனக் கேட்கமாட்டார்கள். இதன் பொருள் ஞாபகமிருக்கட்டும்” எனக் கூறி மறைந்ததைக் கண்டனன். காலையில் விழித் தெழுந்தனன் கடோரசித்தன். கண்ட கனவின் முதற்பகுதி மட்டும் அவன் நினைவுக்கு வந்தது. பிற்பகுதியை மறந்து விட்டான். “நானே கூப்பிட்டா லொழிய காலன் எனையணுகான். என் சந்ததி களுக்கு நான் இருப்பது பெரிய அலுப்பாயிருக்கும். சகல பாக்கியமும் எனக்குக் கிடைக்கும் எனத் தான் வரம்பெற்றுள்ளேனே! நான் ஏன் காலனைக் கூப்பிடவேண்டும்? ஹா! ஹா! எனது குலதெய்வம் சங்கலிக் கறுப்பணத் தேவர் கருணையே கருணை, பெருமாளுக்குச் சரியான குல்லா போட்டு விட்டார்.” என நினைத்து நினைந்து மகிழ்ந்தான்.

வரம் பெற்றவாறே சகல செல்வமுங் கடோர சித்தனுக்கு எய்தியது. அவன் பெரிய வர்த்தகனானான். அநேகங் கப்பல்களுக்குத் தலைவனானான். குபேர னொத்த நிதிபதியாயினன். கிட்டிய செல்வங்கொண்டு போர்வீரர் களைத் திரட்டிப் பல தேசங்களைக் கைக்கொண்டான். திருவுடை மன்னனாய் சக்கிரவர்த்தியாய் அத்தேசங்களை ஆண்டு வந்தான். நீதி மன்றங்களை ஏற்படுத்தி அவை தமக்குச் சிறந்த நியாயாதிபதிகளை நியமித்தான். கோயில்களுக்கெல்லாம் பக்தி நிரம்பிய குருக்கள் மார்களைக்