பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. காலமும் கவிஞர்களும்


னிதனிடம் இயல்பாக அமைந்து கிடக்கும் ஆற்றல்களுள் படைப்பாற்றலும் ஒன்று. அவன் தன் கடமைகளைச் செய்வதற்கு அதுவே பெருந்துணையாக உள்ளது. அந்த ஆற்றல்தான் அவனுக்கு நம்பிக்கையை ஊட்டி அவன் வெற்றியை அடையவும் அதனால் ஒருவித மன நிறைவு கொள்ளவும் இன்றியமையாததாகின்றது. இப்படைப் பாற்றல் இலக்கியத்துறை, கலைத்துறை ஆகியவற்றில்தான் செயற்படும் என்பதில்லை; பிற துறைகளிலும் செயற்படக் கூடும்; செயற் படத்தான் செய்கின்றது. அங்ஙனமில்லையாயின் மனிதன் மனநிறைவை எட்டிப் பிடிக்கவே முடியாது. எனவே, இவ்வாற்றல் கைத்தொழிலில் செயற்படலாம்; கற்பதில் செயற்படலாம்; திறனாய்வதிலும் செயற்படலாம். ஏன்? சந்தி, தெரு இவற்றினைப் பெருக்குவதிலும் கூடச் செயற்படலாம். எல்லா மொழிகளிலுமுள்ள பேரிலக்கியங்கள் தோன்றுவதற்கு இவ்வாற்றலே முதற் காரணமாகும். ஆனால், இவ்வாற்றல் மட்டிலும் செயற்பட்டால் போதாது; ஏற்ற சூழ்நிலையும் அமைதல் வேண்டும்.[1] உலக இலக்கிய வரலாற்றைக் கூர்ந்து நோக்கினால் எல்லாக் காலங்களிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பேரிலக்கியங்கள் தோன்றவில்லை என்பது புலனாகும். இதிலிருந்து அக்காலத்தில் கவிதை புனையும் ஆற்றலுடையவர்களே தோன்றவே இல்லை என்று முடிவு


  1. For a creation of master-work of literature two powers must concur, the power of the man and the power of the moment, and the man is not enough of the moment-Mathew Arnold.