பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழரின் அறிவியல் அறிவு 99 AMMAAASAASAASAASAASAASAASAA AAASA SAAAAA AAAAMSSSMSSSMSSSMSSAS SSAS SSAS SSAS -- .-۔- .س-. --- ہی۔..- ---. -- SS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS அவை அழிந்துபட்டனவோ என்னவோ யாம் அறி யோம். ஆனல் அவர்கள் அத்துறைகளில் அறிவுடைய வராயிருந்தனர் என்பது மட்டிலும் ஒருதலே. பண்டைய அறிவியல் அறிஞர்கள் : உறையூர் முதுக் கண்ணன் சாத்தனர் என்ற புலவர் பண்டையில் அறிவியல் அறிஞர்கள் இருந்தனர் என்பதை, 'செஞ்ஞாயிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புமச் சூழ்ந்தமண் டிலமும் வளிதிரிதரு திசையும் வறிது நிலைஇ காயமும் என்றிவை சென்றளந் தறிந்தோர் போல என்றும் இஜனத்தென் போரும் உளரே;’’’ என்று குறிப்பிடுகின்ருர். செஞ்ஞாயிற்றினது வீதியும் அஞ்ஞாயிற்றினது இயக்கமும், அவ்வியக்கத்தாற் சூழப்பட்ட பார்வட்டமும் காற்றியங்கும் திக்கும் ஓராதாரமுமின்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டுப் போய் அளந்தறிந்தவர்களைப்போல நாளும் இத்துணையளவை யுடையனவென்று சொல்லும் கல்வியை யுடையோரும் உளர் என்ற புலவர் கூற்றில் அத்தகைய அறிஞர்கள் இருந்தமை பெறப்படுகின்றது. வானியல் அறிவு : பண்டையோர் வானியல் துறை யில் அறிவுமிக்கு விளங்கினர் என்பதைப் புறநானூறு போன்ற சங்க இலக்கியங்களால் அறியலாம். விண்ணில் மதி செல்லும் வழியாகிய வட்டத்தை இருபத்தேழு பிரிவு களாகப் பிரித்து அப்பிரிவுகளே அறிந்துகொள்ளும் அடை யாளமாக எறிகடல் ஏழின் மணல் அளவாக’’வுள்ள விண்மீன்களில் இருபத்தேழு விண்மீன்களைக் குறித்து அமைத்தனர் பண்டைய அறிஞர்கள். புறம்-160-ல் புறம்-30. 2 திருமந்-2258.