பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழரின் அறிவியல் அறிவு 103 வெட்டவெளியும் அதனுள் அடங்கியிருக்கும் அண்டங்கள் யாவும் சேர்ந்ததுதான் இப்பிரபஞ்சம். கோடிக் கணக்கான மீன் மண்டலங்களும், அவற். றினின்று விடுபட்ட தனித்தனி மண்டலங்களும், வால் மீன்களும் எரி மீன்களும் எண்ணற்றவை சுழன்று கொண்டிருக்கின்றன. இவற்றின் பிறப்பு, மூப்பு, சாக்காடு இவை பற்றிய செய்திகளே இன்றைய வானநூல் அறிஞர்கள் வெளியிட்டுள்ளனர். மணிவாசகப் பெருமான் இப்பிரபஞ்சத்தைப் பற்றி, ' அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம் அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின் நூற்ருெரு கோடியின் மேற்பட விரிந்தன;’’’ என்று கூறுகின்ருர். பேராசிரியர் ஐன்ஸ்டைன் பிரபஞ்சத்தின் வெளி வளேந்துள்ளது என்றும், அது விரிந்துகொண்டே போகின்றது என்றும் கூறுகின்றர். ஓர் இரப்பர் பலூனின்மேல் பல புள்ளிகளே விரைந்து அப்பலுனே ஊதிகுல் அது பெரிதாக ஆக ஆக, அப் புள்ளிகளின் இடையிட்ட தூரமும் அகன்றுவிடுகின்றது. இதைப்போல வெளியும் மீன்மண்டலங்களை ஏந்திக் கொண்டு அகன்றுகொண்டே போகின்றது என்பது இன்றைய அறிவியலார் கண்ட முடிபு. மேற்கூறியவை போன்ற பல வானியற் கருத்துக்களைப் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் காணலாம். பொறியியல் : பண்டைத் தமிழர்கள் பொறியியலிலும் வல்லுநர்களாக இருந்திருக்கவேண்டும் என்று ஊகிக்க இடம் உண்டு. சிந்தாமணியில் வரும் மயிற்பொறியும், பெருங்கதையில் யூகியால் செய்விக்கப்பெறும் இயந்திர யானையும், இராமாயணத்தில் வரும் புட்பக விமானமும் இயந்திர அறிவில்ை அமைக்கப்பெற்ற சாதனங்கள் 7 திருவாசகம் : திருவண்டப் பகுதி வரி-(t-4.)