பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழரின் அறிவியல் அறிவு 105 SAAAAAA AAAASAAAA AASAASAASAASAASAASAA

  • நாகா லயங்களொடு நாகர் உல குந்தம்

பாகார் மருங்குதுயில் என்ன உயர் பண்ப; ஆகாயம் அஞ்ச அகன் மேருவை அனுக்கும் மாகால் வழங்குசிறு தென்றல்வர நின்ற,’’’ என்பது கம்பன் வாக்கு, கதிரவன் மகர ரேகைக்குத் தெற்கே செல்லுவதில்லை. என்பது மிக சமத்காரமாகக் கூறப்பட்டுள்ளது. இலங்கை மகரரேகைக்குத் தெற்கே நெடுந் தொலைவில் இருப்பதால் அங்கு சூரிய ஒளி படுவதில்லை. இதைக் கம்பன், " முன்னம் யாவரும் இராவணன் முனியுமென் றெண்ணிப் பொன்னின் மாநகர் மீச்செலான் கதிரெனப் புகல்வார் கன்னி யாரையின் ஒளியினரிற் கண்வழுக் குறுதல் உன்னி நாடொறும் விலங்கினன் போதஜல உணரார். 19 என்று கூறுகிருன். கதிரவன் இராவணனது ஆணைக்கு அஞ்சி இலங்கை நகரத்துக்கு மேலே தன் வெப்பக் கதிர்களை வீசுவதில்லை என்று கூறுவது தவறு : இலங்கை மதிலின் ஒளியில்ை கண் கூசுவதால் அவன் விலகிச்செல்லுகிருன் என்பது இதன் கருத்து. நாம் இந்த இரண்டையும் கற்பனையாகவே கொள்ள வேண்டும். சூரியன் மகரரேகைக்குத் தெற்கே செல் வதில்லை என்ற உண்மையைத்தான் கவிஞன் இங்ங்னம் மாற்றி சுவைதரும்படி கூறுகின்ருன் என்று கொள்ள வேண்டும். 9 கம்ப-சுந்தர-ஊர்தேடு-2. 10. கம்ப-சுந்தர-ஊர்தேடு-21.