பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழரின் அறிவியல் அறிவு 1 O7 SAASAASAASAASAASAAMMMA SAMMAMMMAMAAASAAAAASAAAA பண்டையோரும் இம்முறையை அறிந்திருந்தனர் என்ப தைக் கம்பன் காட்டுகின்ருன், இராவண வதம் முடிந்த பிறகு தயரதன் உம்பருலகத்திலிருந்து, பூமிக்கு வந்து இராமனுடன் உரையாடும்பொழுது த்ன் மகிழ்ச்சியை இவ்வாறு தெரிவிக்கின்ருன் :

  • அன்று கேகயன் மகள் கொண்ட

வரமெனும் அயில்வேல் இன்று காறுமென் இதயத்தின் இடைநின்ற தென்னேக் கொன்று நீங்கல திப்பொழு தகன்றதுன் குலப்பூண் மன்றல் ஆகமாங் காந்தமா மணியின்று வாங்க. 1° அன்று கைகேயி தன் இதயத்தில் பாய்ச்சின வரமெனும் அயில்வேல், இன்று இராமனைத் தழுவியதல்ை, அவன் மார்பாகிய காந்தம் அதனே வாங்கிவிட்டது என்று கூறு வதில் நவீன சிகிச்சை முறையின் குறிப்பைக் காண்க. கருவுயிர்த்த மங்கையர் குழந்தையை நீராட்டி மருந் துாட்டி வளர்க்கும் திறம் நம் சிந்தாமணியில் காட்டப் பெறுகின்றது. 'காடி யாட்டித் தராய்ச்சாறும் கன்னல் மணியும் நறுநெய்யும் கூடச் செம்பொன் கொளத்தேய்த்துக் கொண்டு நாளும் வாயுறீஇப் பாடற் கினியப் பகுவாயும் கண்ணும் பெருக உகிர்உறுத்தித் தேடித் தீந்தேன் திப்பிலிதேய்த்(து) அண்ணு உரிஞ்சி மூக்குயர்த்தார்.' 13 கம்பரா-யுத்தகா-மீட்சி-118 14 சிந்தாமணி-2703