பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தமிழுடன் ஆங்கில உறவு உலகத்தின் பல பாகங்களிலுமுள்ள மக்கள் பல் வேறு மொழிகளைப் பேசி வருகின்றனர். மக்கள் கருத்துக் களேப் பரிமாறிக் கொள்ளுவதற்குச் சிறந்த கருவியாக இருப்பது மொழியாகும். இயற்கையிலேயே மனிதன் கலந்து வாழும் பிராணி யாதலால் அவனிடம் வேறு பிராணிகளிடமில்லாத மொழி தோன்றி வளர்ந்து பண் பட்டு இருக்கும் ஒரு சிறந்த சாதனமாகும். இன்றைய நிலையில், மக்கள் நெருங்கி உறவுகொண்டு வாழும் நேரத்தில், மொழி கலப்பு ஏற்படுவது, ஒரு மொழி பிற மொழிகளுடன் உறவு கொள்ளுவது, மிகவும் இன்றி யமையாதது என்பது நாம் அறிந்து கொள்ளவேண்டும். தமிழ் ஆங்கிலத்துடன் ஏன் உறவு கொள்ளவேண்டும் ? எத்தகைய உறவு கொள்ளவேண்டும் ? எந்த அளவுக்கு உறவு கொள்ளவேண்டும் ? அங்ங்ணம் உறவு கொள் வதால் தமிழ் மொழிக்கு ஏற்படும் ஆக்கங்கள் யாவை ? கேடுகள் யாவை ? இவை போன்ற செய்திகளே ஈண்டு ஆராய்வதே நமது நோக்கமாகும். உலகின் எல்லாப் பகுதிகளிலும் அறிஞர்கள் தோன்றிப் பல துறைகளில் பல செய்திகளைக் கண்டறிந்து அவரவர் மொழிகளில் நூல்களாக எழுதி வைத்து விட்டுப் போயுள்ளனர் ; உயிருடன் இருப்போர் எழுதி வெளியிட்டுக்கொண்டு மிருக்கின்ற னர். இப்புதிய செய்திகளை யெல்லாம் தமிழில் கொண்டு வரவேண்டுமானுல் தமிழ் பிற மொழிகளுடன் உறவு கொண்டால்தான் முடியும். இங்ங்ணம் தமிழ் மொழியின் புது வாழ்வியக்கத்திற்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் புதிய இலக்கியப் பெருக்கிற்கும் மொழி