பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழுடன் ஆங்கில உறவு 1 Í I SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SAASAASAASAASAASAASAASAA AAAS என்று தவருக எண்ணி விடுதல் கூடாது. ஒருவரிடம் அதிகமான செல்வமிருப்பினும், மேலும் செல்வம் வந்து சேரும்பொழுது, வேண்டாம் ! என்று சொல்வரா ? தமிழில் என்னதான் இருந்தாலும் புதிதாக, புதிய துறை களில் எல்லாம், சொற் செல்வமும் கருத்துச் செல்வமும் வந்து சேரும்பொழுது வளர விரும்பும் எந்த உண்மைத் தமிழனும் வேண்டாம்!” என்று சொல்லமாட்டான். இன்று தமிழில் உள்ள வடசொற்களே யெல்லாம் நீக்கி விட்டால் சமய சம்பந்தமான கருத்துக்களும் தத்துவ சம் பந்தமான கருத்துக்களும் மறைந்துவிடும் என்றுதான் சொல்லவேண்டும். வட சொற்களேயெல்லாம் நீக்கி விட்டுச் சமயக் கருத்துக்களேயும் தத்துவக் கருத்துக் களையும் தெளிவாக எடுத்துச் சொல்லவே முடியாது. ஏன் ? மருத்துவம், ஒளிநூல், கணிதம், சிற்பம், கட்டிடக்கலை முதலிய பல்வேறு துறைகளிலும் நாம் ஏழைகளாகப் போய்விடுவோம். ஆனல் ஒரு கெய்தி : ஏற்கெனவே தமிழில் இருக்கும் சொற்களுக்கெல்லாம் வேண்டுமென்றே பிறமொழிச் சொற்களை வலிந்து புகுத் துவதைத் தவிர்த்தல் வேண்டும். இன்று, உலகம் பல துறைகளிலும் விரைவாக முன் னேறிக்கொண்டிருக்கும் நேரத்தில், தமிழுக்கு ஆங்கில மொழியின் உறவு மிகவும் இன்றியமையாதது என்று கூறினுல் அதில் உண்மை இருக்கத்தான் செய்கின்றது. ஏன் ? அதற்குப் பல காரணங்கள் உள. இன்று ஆங்கிலம் உலகப்பொது மொழியாக வழங்கி வருகின்றது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்களில் அது பொதுமொழி என்ற நிலையையும் பெற்று உள்ளது. உலகிலுள்ள அறிஞர்களில் பெரும் பாலாரும் ஆங்கில மொழியை அறிந்துள்ளனர். உலகிலுள்ள எல்லாப் பகுதி களிலும் இம்மொழி வழங்கி வருகின்றது. உலகில் இம்