பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழுடன் ஆங்கில உறவு 1 1 9


AMAMMMMMMMM MM AMM M MAAA SS AASAASAASAASAASAA AAAAMMA AMMMMMSASAS SSAS SSAS

யுள்ளன. அறிவியலிலும் பெளதிகம், வேதியியல், தாவர இயல், நில இயல், உயிரியல் முதலிய ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக அகராதிகள் வெளிவந் துள்ளன. ஒவ்வொரு துறையிலும் பல ஆகராதி நூல் களைப் பல அறிஞர்கள் பதிப்பித்துள்ளனர். இம் மாதிரியான நூல்கள் தமிழில் தோன்றவேண்டும். தோன்றுவதற்கு ஆங்கில மொழியின் உறவு மிகவும் அவசியம் என்று சொல்லத் தேவையில்லை. ஏழாவது : தமிழில் இன்று திரு. தி. சு. அவினுசி லிங்கம் அவர்கள் கலேக் களஞ்சியம் பணியைத் தொடங்கி வைத்துள்ளார். ஆங்கிலத்தில் என்சைக் ளோபிடியா’ என்று வழங்கும் இத்துறை தமிழில் வெற்றி யடைய வேண்டுமானல் ஆங்கிலத்தின் தொடர்பு மிகவும் அவசியமாகும். ஆங்கிலத்தில் எத்தனைக் கலைக் களஞ்சியங்கள் உள்ளன ? அகராதிகளைப் போலவே ஒவ்வொரு துறைக்கும் கலைக் களஞ்சியம் உள்ளது. ஆங்கில மொழியில் உள்ள அத்துணை உண்மைகளும் சுருக்கமான முறையில் தமிழில் வரவேண்டுமல்லவா? அதற்கு ஆங்கிலத்தோடு பல கலைகளேயும் பயின்ற எத்தனை அறிஞர்களின் உழைப்பு எத்தனை யாண்டு களுக்கு வேண்டியிருக்கும் ? தமிழுக்கு ஆங்கில மொழியின் உறவு மட்டிலும் இல்லாவிட்டால் தமிழில் * கலைக் களஞ்சியம் வருதல் என்பது குதிரைக் கொம் பாகும் என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே, எந்தக் கோணத்தில் பார்த்தாலும் தமிழுக்கு ஆங்கிலத்தின் உறவு மிகமிக அவசியம் என்பது உறுதிப்படுகின்றது. தமிழ் சிறந்த முறையில் வளர வேண்டுமானுல் நாம் என்ன செய்ய வேண்டும் ? பாரதியாரைக் கேட்போம் :