பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. திராவிட மொழிநூலின் வரலாறு SAASAASAASAASAASAAAS மொழி நூல் நமது நாட்டுக்குப் புதிது. சொற்கள், சொல்லாக்க முறைகள், இலக்கண அமைதி முதலிய வற்றைப் பற்றிப் பல மொழிகளிலுள்ள தொடர்பை ஆராயும் கலையை அறிஞர்கள் மொழிநூல் என்று குறிப் பர். இக்கலை மேனுட்டிலே 18-ஆம் நூற்ருண்டில் தான் தொடங்கிற்று. ஐரோப்பாவில் ஆரிய மொழிகளைப் பற்றியே அறிஞர்கள் அதிகமாக ஆராய்ந்தனர். செருமானிய நாட்டு அறிஞர்கள்தாம் இத்துறையில் அதிகமாகக் கவனம் செலுத்தினர்; கிரிம் (Grimm) பாப் (Bopp) போன்ற அறிஞர்கள் குறிப்பிடத்தக்க வர்கள். இவ்வறிஞர்கள் பல மொழிகளைக் கற்று அவற் றின் இலக்கணங்களைத் தமது மொழிகளில் எழுதி வெளி யிட்டனர். இனமொழிகளை யெல்லாம் ஒப்பிட்டு” அவற் றைப் பல குடும்பங்களாகவும் வகுத்துக் காட்டினர். இவ்வாறு எழுதப்பெற்ற நூல்களையெல்லாம் கற்றுப் புலமையடைந்த மாக்ஸ் முல்லர் என்ற அறிஞர் சென்ற நூற்ருண்டில் உலகமொழிகளில் பெரும்பாலானவற்றை ஆராய்ந்துத் தமது மதி நுட்பத்தால் ஒப்பியல் மொழி [5T8. (Comparative Philology) 2 (jSuTáô®Î. <$%&)$ இவ்வறிஞர் திராவிட மொழிகளைச் சரியாக ஆராய வில்லை ; திராவிட மொழிகள் வட மொழியின் கிளேகள் என்ற தவருண முடிவுக்கும் வந்துவிட்டார். ஆகவே, திராவிட மொழிகள் ஒரு தனிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்ற உண்மையை மக்கள் அறிய முடியாது போயிற்று. ஆனல், சென்ற நூற்ருண்டின் பிற்பகுதியில் இவ்வுண்மையை மக்கள் அறிந்தனர் , அறிஞர்கள் இவ்வுண்மையைப் பாராட்டினர். கால்டுவெல் என்ற