பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 33 காலமும் கவிஞர்களும் பேரறிஞர் திராவிட மொழிகள் வடமொழிச் சார்பற்றவை. என்று பல சான்றுகளால் எடுத்துக் காட்டிய தோடன்றி அவை ஒரு தனிக் குடும்பத்தைச் சார்ந்தவையென்றும் பல சான்றுகளால் மெய்ப்பித்தார். தமது கருத்துக்களே யெல்லாம் தொகுத்து 'திராவிட மொழிகளின் ஒப்பிலக் assoorth” (A Comparative Grammar of Dravidian. Languages) என்ற ஆங்கில நூலாக, கி. பி. 1856-ல் வெளியிட்டார். இதுதான் முதன்முதலாகத் தோன்றிய 'திராவிட மொழி நூலின் தந்தை” என்று அறிஞர் உலகம் இன்று பராட்டுகின்றது. கால்டுவெல் தமது இருபதாவது வயதில் இலண் டன்மா நகரிலிருந்த சமயத் தொண்டர் சங்கத்தில் உறுப்பினராகி அதன் சார்பில் கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்து கிரேக்க மொழி, இலத்தின் மொழி முதலிய ஐரோப்பியத்தொன் மொழிகளிலமைந்த சமய நூல்கள்யும் நீதி நூல்களையும் கற்க நேரிடும்பொழுது அவரிடம் மொழி நூல் பற்றிய பல கருத்துக்கள் ஆழ்ந்து அமைந்தன. அங்கு கிரேக்க மொழி பயிற்றிய பேராசிரியர் சர் டேனியல் சேண்ட்ஃ போர்டு என்பார் கிரேக்க மொழியின் அருமை பெருமைகளே யெல்லாம் பிற உயர் தனிச் செம் மொழிகளுடன் ஒப்புமைப் படுத்திக் காட்டிய திறமை இவர் உள்ளத்தைக் கவர்ந்தது ; ஆகவே, அத்துறையில் இவர் கவனம் சென்றது. எனவே, பிற்காலத்தில் "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நூல் தோன்றுவதற்கு இன்றி யமையாத மொழி நூல் முறையை எடுத்துரைத்தும் அத்துறையில் ஆர்வத்தை எழுப்பியும் அடி கோலிய பெருமை அ ப் பேரா சிரிய ரு க் கே உரியதாகும். இலண்டன்மாநகரத் தொண்டர் சங்கம் இந்தியாவில் சமயத் தொண்டாற்றக் கால்டுவெலத் தேர்ந்தெடுத்து