பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திராவிட மொழிநூலின் வரலாறு f :27 களுள் மலேயாளம் நெடுங்காலம் தமிழொடு நெருங்கிய தொடர்புடையதாயிருந்த தென்றும், பிற்காலத்தில் வட மொழிச் சொற்களையும் போக்குகளையும் தழுவியதால் தற்கால மலையாளம் முற்கால மலையாளத்தினின்று வேறு பட்டிருக்கிறதென்றும், கால்டுவெல் தக்க சான்று களுடன் நிறுவியுள்ளார். இங்ங்னமே தெலுங்கும் கன்னடமும் வடமொழிச் சொற்களே அளவின்றி ஏற்றுக் கொண்டமையால், அம்மொழியின் உதவியின்றித் தனித்தியங்க முடியாத நிலையை அடைந்து விட்டன என்றும் குறித்துள்ளார். தமிழ்ப் புலவர்கள் தொன்று தொட்டு இயன்றவரை இயற்றமிழ்ச் சொற்களையே நூல் களில் போற்றியமைத்தமையானும் இன்றியமையாத இடங்களில் வழங்கும் பொழுது அவற்றைத் தமிழின் நீர்மைக் கேற்றவாறு மாற்றி வழங்கி வந்தமையானும், தமிழ் மொழி இன்றளவும் பண்டைத்திறம் குன்ருது வளர்கின்றதென்றும், தமிழில் இன்று வழங்கும் வட சொற்களைக் களைந்துவிடினும் தமிழ் தனித்தியங்கும் ஆற்றல் வாய்ந்த தென்றும் தெளிவாக்கியுள்ளார். இன்னும் இந்நூலில் திராவிடக் குடும்பத்தில் தொன் மையும் செம்மையும் வாய்ந்து விளங்கும் மொழி தமிழ் மொழியென்றும், ஆசிய நாடுகளில் வழங்கும் சித்திய குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளுக்கும் நெருங்கிய ஒற்றுமை காணப்படுவதால், அவ்விருவகை மொழிகளும் ஓரினத்தைச் சேர்ந்தவை என்றும் விளக்கியுள்ளார். இரண்டாவது கொள்கையை நிலைநாட்டுவதற்குரிய சான்றுகளே இந்நூலில் எம்மருங்கும் காணலாம். கால்டுவெல் காட்டிய வழியைக் கடைப் பிடித்து பிளிக் (Bieek) என்பார் தென் ஆப்பிரிக்க மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலையும், பீம்ஸ் (Beames) என்பார் வட இந்திய பேச்சு மொழிகளே (Vernaculars) ஆராய்ந்து, இந்தியாவின் நவீன ஆரிய மொழிகளின்