பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திராவிட மொழிநூலின் வரலாறு I 29 தென்னிந்திய மொழிகளைக் குறித்தற்குத் திராவிடம்’ என்ற குறியீட்டைக் கையாண்டதன் காரணத்தை நூலின் முற்பகுதியில் விளக்குகின்ருர் கால்டு வெல். கி. பி. 7-ஆம் நூற்ருண்டில் விளங்கிய வடமொழி வாணர் குமரில்ல பட் என்பார் தென்னிந்திய மொழி யினத்தைக் குறித்தற்கு ஆந்திர-திராவிட பாஷா என்ற தொடரை எடுத்தாண்டதாலும், மனு ஸ்மிருதியில் பத்தாவது பிரிவில் திராவிடர்” என்ற மக்கட் பிரிவு இருப்பதாலும், இந்தியப் பெரு மூதாதையரில் ஒருவ ரான சத்திய விரதரைக் குறிக்குமிடத்துப் பாகவத புராணம் திராவிட மன்னர் என்று குறிப்பதாலும் ஸ்மிருதி காலத்திற்குப் பிறகு வந்த மொழியாராய்ச்சி யாளர்கள் திராவிடம் என்ற சொல்லைத் தென்குட்டு மொழியினத்தைக் குறித்தற்கு எடுத்தாண்டிருத்தலா லும், தாமும் திராவிடம் என்ற சொல்லே எடுத்தாண் டிருப்பதாகக் கால்டுவெல் கூறுகின்ருர். இம் மொழிநூல் துறையில் ஆராய்ச்சி செய்வதற்கு எவ்வளவோ இடம் உள்ளது. மேனுட்டுக் கல்வி கற்று எம். ஏ. முதலிய பட்டங்களேப் பெற்ற அறிஞர்கள் இத் துறையில் அதிகக் கவனம் செலுத்தவில்லை. கடந்த ஐம்பதாண்டுகட்கு மேல் சென்னைப் பல்கலைக் கழகத் தாரால் நடத்தப்பெறும் பி. ஏ., எம். ஏ. தேர்வுகளுக்கு மொழிநூல் பாடப் பகுதியாக இருந்தும் வருகின்றது : பலர் பட்டமும் பெற்றுக்கொண்டுதான் வருகின்றனர். பெரும்பாலோர் இப்பகுதியைச் சரியாகப் படிப்பதும் இல்லை. கற்பிப்பவர்கள் கற்பிப்பதுடனும் கற்பவர்கள் கற்பதுடனும் நின்று விடுகின்றனர். டாக்டர் கால்டு வெல் அவர்கள், இத்துறையில் ஆராய்ச்சி செய்யும் மனப் பான்மையைத் தமிழையும் பிற திராவிட மொழிகளேயும் அழுத்தமாகக் கற்ற அறிஞர்களிடம் உண்டாக்கிவிட் டால் இத்துறை விரைவில் வளர்ச்சியடையும் என்ற 47— 1 O