பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர்கால வாணிகம் i 37 பட்டு மாவட்டத்தில் வாணிகம் செய்ததையும், சென்னை-மயிலாப்பூர் வணிகன் ஒருவன் தஞ்சையில் வாணிகம் செய்ததையும் இன்று இலங்கை எனப்படும் ஈழ நாட்டு வணிகன் ஒருவன் தென் திருவிதாங்கூரைச் சார்ந்த சுசீந்திரம் கோவிலுக்கு விளக்குத் திருப்பணி செய்ததையும் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. உலோக சம்பந்தமான கைத்தொழில்கள் நல்ல நிலையிலிருந்தன. அன்ருட உபயோகத்திற்கு வீடு களில் தேவையாக இருக்கும் உலோகப் பாத்திரங்களேச் செல்வர்களே அநுபவித்தனர். ஏழை மக்கள் மண் பாண்டங்களேயே பயன்படுத்தினர். சமைப்பதும் உண் பதும் அக்கலங்களிலேயே நடைபெற்று வந்தன. அறச்சாலைகளிலும் அவற்றையே பயன்படுத்தின செய்தியைக் கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. அக் காலத்தில் செய்யப்பட்ட வெண்கலப் பாத்திரங்கள் இன்றும் கெடாது இருப்பதை நோக்கும் பொழுது, அக் காலத்தில் கன் ஞர்கள் கலவை உலோகங்களைத் தயாரித்து அவற்றைக் கொண்டு மிக நயமான பாத்தி ரங்களே வார்ப்பதில் மிகத் திறமையடைந்திருந்தனர் என்பது தெரிய வருகின்றது. தாமிரம், பித்தளை, வெண் கலம் ஆகிய உலோகங்கள் பயன் படுத்தப்பெற்றன: வெள்ளியும் தங்கமும் அரிதாக வழங்கின. தங்கத்திகுல் உயர்ந்த நகைகளும், அணிகளும், கல் இழைத்த அணிகளும் செய்யப்பட்டன. நாட்டின் செல்வத்தின் பெரும்பகுதி பொற்கொல்லர்களின் வாணிகத்தில்தான் மூழ்கி விட்டதோ என்று சொல்லும்படி, அவ்வளவு உன்னத நிலையில் அத் தொழில் திகழ்ந்தது. கம்மியர் கலேயும் பொற் கொல்லர் கலையும் மிக உயர்ந்த நிலையில் இருந்தன என்பதைத் தஞ்சைக் கல்வெட்டுக்களால் அறிகின்ருேம். இன்றும் நகைகளின் மூலமும் பிற அணிகளின் வாயிலாகவும் மக்கள் செல்வத்தைச்