பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழர்கால வாணிகம் 1 33 கடமையை மேற்கொண்டிருந்தனர். இந்த ஏற்பாட் டைக் காஞ்சியிலுள்ள நகரம்’ என்ற சபை செய்தது.” உள்நாட்டு வாணிகம் நடைபெறுவதற்குப் போக்கு வரத்துச் சாதனங்கள் எவ்வாறு இருந்தனே என்பதைப் பற்றி விரிவான செய்திகளை அறியக்கூட வில்லை. தென்னிந்தியாவில் வியாபாரச் சரக்குகளைக் கடத்து வதற்கான இயற்கை நீர்வழிகள் இல்லை; ஆறுகளும் வாய்க்கால்களும் பயிர்த் தொழிலுக்குத்தான் பயன் பட்டனவே யன்றி சரக்குகளைக் கடத்துவதற்குப் பயன் படவே இல்லை. இன்று சென்னைக்கு நெடுந்தொலைவி லுள்ள இடங்களிலிருந்து தேங்காய், விறகு, வைக்கோல் போன்ற பொருள்கள் படகுகளின் மூலம் பக்கிங்காம் கால்வாய் வழியாக வந்திறங்குவது போல், சரக்குகள் வருவதற்கும் போவதற்கும் அக்காலத்தில் இயற்கைச் சாதனங்கள் ஒன்றும் இல்லை. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் இருந்தன வென்று பல்வேறு இடங்களிலுள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்ற்ன. கல் வெட்டுக்களில் இரண்டுவித சாலைகள் குறிக்கப்பெறு கின்றன. கால்நடைப் பாதையைவிட சற்று நல்ல நிலையிலுள்ள வாடிகள்' என்பன ஒருவகை. இவை வண்டிகள் செல்லுவதற்குத் தகுதியற்றவை. உத்தர மேரூரிலுள்ள இத்தகைய வாடியொன்று வெள்ளத்தால் அழிந்து பட்டதாகவும், அப்பாதை கால்நடைகள் செல்லுவதற்குப் பயனற்றுப் போனதாகவும், அதைத் திருத்துவதற்கும் அகலப்படுத்துவதற்கும் அவ்வூரவை: பக்கத்து உழவர்களின் நிலங்களைக் விலைக்கு வாங்கின தாகவும் அவ்வூர்க் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகின்றது. மற்ருெரு வகை பெருவழிகள் என்று சொல்லப். படுபவை; இவை இக்காலத்துள்ள Highways எனப் படும் சாலைகளைப் போன்றவை என்று சொல்லலாம். 3. Museum plates of Uttama Chola.