பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 40 காலமும் கவிஞர்களும் ......................--ബ~~. வடுகப் பெருவழி அல்லது ஆந்திரப் பாதை, கொங்கப் பெரு வழி, தஞ்சாவூர்ப் பெருவழி ஆகிய சாலைகளைக் கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. தஞ்சாவூர் மாவட் டத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்று கல்யாணபுரப் பெருவழி என்ற ஒரு பெரிய சாஜலயைக் குறிப்பிடு கின்றது. இச்சாலைகளின் அகலம் இரண்டு கோல்’ ஆகும்; அது கிட்டத்தட்ட இருபத்து நான்கு அடி அளவு இருக்கும். பெருஞ்சாலைகளையும் சிறு சாலே களையும் சீர்திருத்தும் பொறுப்பு அவ்வவ்விடத்து மக்களையே சார்ந்திருந்தது. ஊர் மக்கள் இனமாகச் செய்யும் சாலை சம்பந்தமான வேலையை வெட்டி,’ அமஞ்சி என்று கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. சோழர்களின் ஆட்சியில் வெளி நாட்டு வாணிகமும் மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. ஒன்பதாம் நூற்ருண்டில் தென்னசிய நாடுகள் யாவுமே இதுகாறும் வரலாற்றிலேயே புகழ்பெருத அளவு கடல் வாணிகத்தை வளர்த்தன என்று சொல்ல வேண்டும். சீனம், கிழக் கிந்தியத் தீவுகள், அரேபியா ஆகிய நாடுகள் இவ் வாணிகத்தில் பெரும் பங்கெடுத்துக் கொண்டன. தஞ்சையில் முதலாம் இராச ராசன் ஆண்ட காலத் திலும், அவன் அருமை மகன் முதலாம் இராசேந்திரன் ஆண்ட காலத்திலும் சோழ நாடு சீனுவுடன் நல்ல உறவு கொண்டிருந்தது. இது சம்பந்தமான பல செய்திகளை வரலாறு ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். ரீ விஜயாவுக்கு விரோதமாக இராசேந்திரன் எடுத்த கடற்படையெடுப்புக்குப் பிறகு தெற்கிலுள்ள நாடு களுக்கும் சீனாவுக்கும் நல்ல உறவு ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும். விசய ராசேந்திரன் காலத்தில் இப் பொழுது பர்மா என்று சொல்லப்படும் கடார நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக அந்நாட் உரசன் சோழர்களுடைய உதவியை நாடிய செய்தி