பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 காலமும் கவிஞர்களும் AAA AASAAAA AAAA AAAA AAAASAAAASA SAASAASSSJSJSS SAASAASAASAASAASAASAASAASAASAASAASAAASJS தோறும் நடைபெறும் திருவிழாவுக்குத் திருக்கொடி வழங்கும் திருப்பணியை மேற்கொண்டிருந்தனர். சூசகர் கருணுகர வீரர் எனப்படும் தென்னிலங்கை வலஞ் சியர் திருக்கண்ண புரத்திலிருந்த வைணவ மடத்திற்குக் காணிக்கை செலுத்தி வந்தனர். நெல்லூர், நாராயண புரம், ஆர்க்காடு, மயிலாப்பூர், திருவொற்றியூர், பூவிருந்தவல்லி, நெடும்பிறை, தமனகச் சேரி, பெருங் காலூர், திருநீறு ஆகிய இடங்களிலிருந்த வணிகப் பெருமக்கள் ஒரு சிற்றுாரையே விலைக்கு வாங்கி அதைத் திருப்பாசூர் கோவிலுக்கு மதில் எழுப்பும் திருப்பணிக்குத் தேவதானமாகக் கொடுத்த செய்தி யைக் கல்வெட்டுக்களால் அறிகின்ருேம். அம்பில் கல்வெட்டு ஒன்றினுல் சித்திர மேழிப் பெரிய நாட்டார், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், தவனச் செட்டிகள், சயபாலர்கள், முனேவிர கோடியர், முடற்படைக் கலைஞர், ஆகிய வணிகக் கூட்டத்தார் தம்மை இராச ராசப் பெரு நீரவியோம்' என்று குறிப்பிட்ட செய்தியை அறிகின்ருேம். அன்றியும், வலஞ்சியரும், நாணு தேசியத் திசை ஆயிரத்து ஐந்நூற்றுவரும் திருவிளக்குடியிலுள்ள கோவிலுக்குத் திருப்பணி செய்ததைக் கல்வெட்டு ஒன்று குறிப்பிடுகின்றது. நானுதேசத் திசையாயிரத்தைந்நூற்றுவர் என்ற வணிக சங்கந்தான் பெரும் புகழ் பெற்றுத் திகழ்ந்த தாகத் தெரிகின்றது. பன்னெடு நாட்களாகவே இச்சங் கம் பணியாற்றி வந்துள்ளது. விசயாலய மரபுச் சோழர்கள் தலையெடுப்பதற்கு முன்பே இச்சங்கம் இருந்தமை புதுக்கோட்டைப் பகுதியில் முனி சந்தை என்ற இடத்திலுள்ள இரண்டு சிறிய கல் வெட்டுக்களால் அறிகின்ருேம். விசயாலயன் அல்லது முதற் பராந்தகன் காலத்தில் தோன்றியதாகக் கருதப் பெறும் அக்கல்வெட்டுக்கள் அங்குள்ள குளத்தைச் சீர்