பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15J காலமும் கவிஞர்களும் அருகில் ஸ்த்தபணி என்னும் மலேக்குகையில் கார் காலத்தைக் கழிப்பதற்காக ஐந்நூறு தேரர்கள்-வயது முதிர்ந்த பிட்தக்கள்-ஒருங்கு கூடினர். இதுவே பிட் சுக்கள் கூட்டிய முதல் மாநாடாகும். இம்மாநாட்டிற்குப் புத்தருடைய முக்கிய சீடர்களுள் ஒருவரான மகா காசியர் என்பார் தலைமை தாங்கினர். உபாலி என்ற மற்ருெரு முக்கிய சீடர் புத்தர் பெருமான் அருளிய விநய போதனைகளைத் தொகுத்து ஒதினர். இவை பிட்சுக் களும் பிட்சுணிகளும் ஒழுகவேண்டிய ஒழுக்கங்களைப் பற்றியவை. இன்னுெரு முக்கிய சீடராகிய ஆநந்தர் புத்தர் அருளிய தம்ம போதனைகளே ஒதினர் ; இவை அறநெறிகள் பற்றியவை. இவை முறையே விகய பிடகம், தம்மபிடகம், அல்லது அபிதம்மபிடகம் என்று பெயர் பெற்றன. பிற்காலத்தில் அயிதம்ம பிடகத்தி லிருந்து சூத்திர பிடகம் என்று மூன்ருவது பிடகம் தொகுக்கப்பெற்றது. இவை மூன்றும் இன்று திரிபிட கம்” என்று வழங்குகின்றது; இவையே பெளத்த வேதங் களாகும். பிடகம் என்ருல் பாலிமொழியில் கூடை என்பது பொருள். திரிபிடகம் என்ருல் மூன்று கூடை என்று பொருள்படும் : அதாவது, மூன்று தொகுப்பு என்பது கருத்து. ஒவ்வொரு பிடகத்திலும் பல பிரிவுகள் உள. திரிபிடகம் தொகுக்கப்பெற்ற பிறகும் அவை எழுதாமறையாகவே இருந்தன; ஆசிரியமாணுக்கர்வழி முறையாக நெடுங்காலம் ஒதப்பெற்று வந்தன. பெளத்த சமயப் பிரிவுகள் : புத்த மதத்தில் பிற்காலத்தில் பிளவுகள் ஏற்பட் டன ; பல பிரிவுகள் உண்டாயின. பிட்சு சங்கத்தில் புதிதாகச் சில பழக்க வழக்கங்கள் புகத்தொடங்கின. அவற்றைக் கண்டிக்கும் பொருட்டு வைசாலி நகரத் தில் 700 பிட்சுக்கள் மாநாடு கூடி எட்டு மாதம்