பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் காட்டிய நெறி 星58 துன்பம் தருவன என்று அறிதலே துக்கம் என்னும் முதல் உண்மையாகும். இதைச் சாத்தனுர்,

  • உணர்வே அருவுரு வாயில் ஊறே

நுகர்வே பிறப்பே பிணிமூப்புச் சாவே அவலம் அரற்றுக் கவலே கையாறென நுவலப் படுவன நோயாகும்மே” என்று கூறுகின்ருர், துக்கத் தோற்றம் : துக்கோற்பத்தி என்பது நோய்த் தோற்றம். இன்னும் அவர் பிறப்புக்குக் காரணமாகவுள்ள துக்கத் தோற்றத் தைப்பற்றி இவ்வாறு விளக்கிக் கூறுகின்ருர் : பேதமை சார்வாச் செய்கை யாகும்; செய்கை சார்வா உணர்ச்சி யாகும் ; உணர்ச்சி சார்வா அருவுரு வாகும் ; அருவுரு சார்வா வாயி லாகும்; வாயில் சார்வா ஊரு கும்பே; ஊறு சார்ந்து நுகர்ச்சி யாகும் ; நுகர்ச்சி சார்ந்து வேட்கையாகும் ; வேட்கை சார்ந்து பற்ற கும்மே ; பற்றிற் ருேன்றும் கருமத் தொகுதி : கருமத் தொகுதி காரண மாக வருமே ஏனே வழிமுறைத் தோற்றம் : தோற்றம் சார்பின் மூப்புப்பிணி சாக்காடு அவலம் அரற்றுக் கவலைகை யாறெனத் தவலில் துன்பம் தலைவரும் என்ப 'கி பன்னிரு சார்புகளின் தொடர்புதான் பிறப்புக்கும் காரணமாகும் இங்கும் அங்கும் சிறுபான்மையே நிறை வேறுவதற்குரியனவாகிய காமலோபங்களோடு சேர்ந்த வேட்கை என்பதே இது ; இதுவே பிறப்பீனும் வித்து. 8 மணி.30: 179.182, 4 மணி, 30: 104.117