பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தர் காட்டிய நெறி 159 AeeAMAMAMSMSMSAMMAAAA வேண்டும். பிறகு தன் ஆசிரியருடன் கூடவே இருந்து தருமத்தையும் சீலத்தையும் அறிந்துகொண்டு தந்தை யிடம் மைந்தன் நடப்பதுபோல் நடந்துகொள்ளல் வேண்டும். இந்த நியமங்களை மேற்கொள்ள இயலாத வர்கள் இல்லற நிலைக்கே வந்து விடலாம். புத்தருக்கு முன் : புத்த பெருமான் அவதரிப்பதற்கு முன்னதாகவே நம் நாட்டில் பெளத்த சமயத்துக்கு இன்றியமையாத கொள்கைகள் வழக்கத்தில் இருந்தன என்பதற்குச் சான்றுகள் உள்ளன. இதைப் பெளத்த நூல்களும் தெரி விக்கின்றன. சாத்தனரும்,

இறந்த காலத் தெண்ணில்புத் தர்களும்

சிறந்தருள் கூர்ந்து திருவாய் மொழிந்தது ' என்று க்ட்டுகின்ருர். தத்துவ விசாரணை மிகுதியாக இருந்த காலத்தில் புத்தர் பெருமான் தோன்றியத்ால், அத்தகைய மணம் அவருடைய கொள்கைகளிலும் கமழ் கின்றது. முன்னேர் ஞானமே அவருக்கு மூலதனமாக இருந்ததால் வேதாந்தத்திற்கும் பெளத்த சமயத்திற்கும் பலவற்றிலும் ஒற்றுமை நிலவுகின்றது. எடுத்துக்காட்டாக

  • பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம் ;

பிறவார் உறுவது பெரும்பேரின்பம்; பற்றின் வருவது முன்னது ; பின்னது அற்றேர் உறுவது.' என்ற பெளத்தக் கொள்கையில் வேதாந்தக் கருத்தைக் தழுவியிருத்தல் காணலாம். பெளத்தசமய மறைவின் காரணம்: புத்த சமயம் நம்நாட்டில் ஆதிக்கம் இல்லாது போன தற்குப் பல காரணங்கள் உள்ளன. நம் நாட்டிலுள்ள 10 மணி. 30: 14-15 11. மணி, 2 64-67