பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 80 காலமும் கவிஞர்களும் சமணம், வைதிகம் ஆகிய சமயங்களின் தாக்குதல் களாலும், புத்த சமயத்திலிருந்து தோன்றிய உட்பிரிவு களிடையே நேரிட்ட வாதப்போர்களாலும் நாளடைவில் அதன் வலிமை குன்றி விட்டது. புத்தர் பெருமான் வேதாந்தக் கொள்கையில் அடங்கியிருக்கும் அப்பிரத்தி யட்சமான தத்துவங்களே அநுமான வாதங்களால் சாதிக்கமுடியாதென்ற கருத்தை யுடையவராயிருந்தார். தெய்வம் உண்டென்னும் உறுதியும், ஆன்மாக்கள் உண்டென்னும் உறுதியும் அவற்றின் இலக்கணங் களையும் சம்பந்தத்தையும் அறிந்து கொள்ளுதல் நல்லொழுக்கத்திற்கு அடிப்படை என்று அவர் உறுதியாக எண்ணுதிருந்தமையும், அவர் சமயம் வலியற்றுப்போன தற்குக்காரணம் என்றும் கருதலாம். ஆன்மாவைப்பற்றி யும் பிரம்மத்தைப்பற்றியும் வழக்காடுவதைக் காட்டிலும் ஒழுக்கத்தைத் தூய்மையாக்கி நடைமுறையில் கொண்டு வந்தால் துன்பங்குறையும் என்று எண்ணங்கொண்டே அவர் தம் தருமத்தை வெளியிட்டுப் பரவச் செய்தார். சொந்தப் பயனே நாடி முயல்வது அறமன்று என்பதும் பயன் கருதாது பிறருக்காகப் புரியும் கருமமே துன் பத்திற் கேதுவான உலகப்பற்றினே அறுப்பதென்பதும் அவருடைய கொள்கையாகும் ; அதுவே அவருடைய வாழ்க்கை நெறியாகவும் அமைந்திருந்தது. பெளத்தசமயச் சின்னங்கள் : இன்று புத்த சமயத்தின் ஆதிக்கம் நம் நாட்டில் இல்லாது போயினும், அதன் சின்னங்கள் அடியோடு அழிந்துபடவில்லை. ஒரு சில கொள்கைகள் இந்து மதத் தில் கலந்து காணப்படுகின்றன. புத்தரை அவதாரமாக ஏற்றுக்கொண்டது, பெளத்த சிறு தெய்வங்களைப் புதுப் பெயர்களேச் சூட்டி ஏற்றுக்கொண்டது, வேள்வியில் உயிர்க்கொலே நீக்கியது, அரசமரத்தைத் தொழுவது