பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

காலமும் கவிஞர்களும்


என்பன போன்ற பாடல்கள் கனிந்த நாட்டுப் பற்றைக் காட்டுபவை. இறுகாறும் கன்னியர் காதலையும் கடவுட் காதலையும் பொருளாகக் கொண்ட கவிதைகளைச் சுவைத்த தமிழர் நாட்டுப் பற்றைப் பொருளாகக் கொண்டு பாடப்பெற்ற கவிதைகளை மிக்க ஆர்வந்துடனும் சுவையுடனும் துய்த்தனர். திருவாசகம், திவ்வியப் பிரபந்தங்களின் நடையையும் பாணியையும் ஒட்டிப் பல பாடல்களைப் பாடியுள்ளான் பாரதி. பழைய யாப்பையும் போக்கையுமே வரையறையுடன் கையாண்டால் பொதுமக்கள் வாழ்வுடன் நன்கு கலக்க முடியாது என்பதை உணர்ந்த கவிஞன், புதிய யாப்புக்களையும் வண்ணங்களையும் கையாண்டான். சாதாரண மக்கள், குழந்தைகள் இவர்கள் பேசும் சொற்களைக் கையாண்டு உயர்ந்த கவிதைகளைப் படைத்துள்ளான். இக்காலச் சமுதாய வாழ்வு பாரதியின் பாடல்களைப் பிரதிபலிக்கின்றது. பாரதியின் கல்விப் பயிற்சியைப் பற்றிய செய்திகள் சரியாகப் புலப்படவில்லை. ஆனால், அவன் தமிழை ஆசிரியன் அடிக்கமலத்திருந்து முறையாகத் திரிபற ஓதி உணரவில்லை என்பது அறிய முடிகின்றது. எனினும், அவன் வாழ்ந்த காலம் ஏற்ற சூழ் நிலையினை நல்கிக் கருவிலே திருவுற்ற அவனிடம் கவிதை புனையும் ஆற்றலை எழுப்பியது. அந்த ஆற்றல் புதிய வடிவெடுத்து மணிமணியான பாக்களைக் கொட்டும் வன்மையையும் அடைந்தது. [1]4 என்ற கவிஞனின் கனவை ஓரளவு நனவாக்கி நமக்கும் பரம்பரைச் சொத்தாகப் பல கவிதைகளைத் தரச் செய்தது.

பொருள் கருவியாகத் துய்க்கும் புற இன்பத்தை விட மனம் கருவியாகத் துயக்கும் இலக்கிய இன்பமே


  1. ‘பாட்டுத் திறந்தாலே- இவ்வையத்தைப் பாலித்திட வேணும்’