பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளரும் பயிர் 183 குழந்தைகள் மிகவும் முக்கியமானவர்கள். வருங்கால சமுதாயம் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டுமாளுல் இன்று சமுதாயத்தில் வளரும் பயிர்களாகிய சிறு குழந் தைகளே வளர்ப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண் டும். இன்றைய சமுதாயம் இருக்கும் நிலையினேயும் இச் சமுதாயத்தைப் பொறுப்பாளர்களாக இருந்து ஆள் வோரின் தகுதியையும் திறமையையும் ஒழுக்கத்தினையும் கவனித்தால், இருபது அல்லது நாற்பது ஆண்டுகட்டு முன்னர் அக்காலத்திலிருந்த அரசாங்கம் குழந்தைகளின் கல்வியில் எவ்வளவு தூரம் கவனம் செலுத்தி வந்தது என்பதை ஓரளவு அறிந்துகொள்ளக்கூடும்; இன்றைய அநுபவத்திலிருந்து வருங்கால் சமுதாயத்தை ஆக்கும் அரசாங்கம், இன்று குழந்தைகளின் கல்விப் பொறுப்பில் எவ்வளவு அக்கறை காட்ட வேண்டும் என்பதன் உண்மைகளைத் தெரிந்து அதற்கேற்றவாறு செயலாற்ற வேண்டும்.

  • நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.’’’ என்று வள்ளுவப் பெருந்தகை கூறும் பொன்மொழியினை ஆராய்ந்து பார்க்க வேண்டும். கேவலம் உடலின் நோய்க்கே நோயின் மூலகாரணத்தை ஆராய்ந்து அதற் கேற்ப மருந்து கொடுக்க வேண்டும் என்று சொல்லும் பொழுது, மனித சமுதாயத்தின் மனத்தைப் பற்றும் நோய்களின் மூலகாரணத்தைக் கண்டறிந்து அதற்கேற்ற வாறு அந்நோய்களைப் போக்க வேண்டாமா? நோய்கள் வந்துற்ற பிறகு போக்குவதை விட அவை வருமுன் காப்பது அறிவுடமையல்லவா? இன்றைய குழந்தைகளின் கல்விப் பொறுப்பில் கவனம் செலுத்தும் அரசாங்கம் முதலில் ஆசிரியர்களின் بدستسانس تماعی عنانسناسم. 1. குறள்-948