பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளரும் பயிர் 39 திருப்பதும் மனிதன் தன் அநுபவ அறிவால் சூழ்நிலக் கேற்றவாறு தன்னை அநுசரித்துக் கொள்வதும் நாம் நாள்தோறும் காணும் உண்மைகளாகும். இயல்பூக்கங்களின் குறைவைத் தவிர, மனித னிடம் இன்னொரு சிறப்பும் அமைந்துள்ளது. உயிர்ப் பிராணிகளிலேயே திமிங்கலத்தையும் யானையையும் தவிர மனிதன்தான் பெரிய மூளையைப் பெற்றுள்ளான் என்று சொல்ல வேண்டும். இயல்பூக்க நிலையிலிருந்து அறிந்துகொண்டவை யாவும் பகுத்தறிவு நிலைக்குக் கொண்டுவரப்பட்டு பாகுபாடு செய்யும் தன்மையும் முன்னதுபவத்தைப் பயன்படுத்தக் கூடிய திறனும் மனிதனிடம் இயல்பாகவே அமைந்துள்ளன. இதைத்தவிர, இன்னுெரு உண்மையும் மனித னிடம் அமைந்துள்ளது. ஏனேய பிராணிகளின் இளமைப் பருவத்தையும் மனிதனுடைய இளகிமப் பருவத்தையும் உற்று நோக்கினுல், ஏனைய பிராணி களின் இளமைப் பருவத்தை விட மனிதனுடைய இளமைப் பருவம் நீடித்திருப்பது தெரியவரும். மனித னுடைய இளமைப் பருவம் மட்டிலும் இங்ஙனம் நீடித் திருப்பதற்குக் காரணம் என்ன ? சிந்தனை செய்து பார்த்தால், சில உண்மைகள் விளங்காமற் போகா. ஏனைய பிராணிகள் யாவும் இயல்பூக்கங்களின் அடிப் படையில் மட்டிலும் சூழ்நிலைக்கேற்றவாறு தம்மைச் சரிப்படுத்திக் கொள்ளவேண்டியிருத்தலும் மனிதன் மட்டிலும் இத்துடன் அறிவு நிலையிலும் தன்னச் சூழ் நிலைக் கேற்றவாறு சரிப்படுத்திக்கொள்ள வேண்டியிருத் தலும் தெரியவரும். ஏனைய பிராணிகள் தம் அது பவத்தையும் மட்டிலும் கொண்டு வாழ்கின்றன; ஆளுல், மனிதன் தன் அநுபவத்துடன் தனது மூதாதையரின் அநுபவத்தையுங் கொண்டு தனது வாழ்க்கையை