பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

妻了赛 மனிதனுடைய குழந்தைப் பருவம் இந்தக் காலத்தைத் தான் நாம் 1ள்ளிப் பருவம்” என்றும், மூதாதையரின் அதுபவத் தைப் பெறுவதைத்தான் கல்வி கற்றல்’ என்றும் சொல்லுகின்ருேம். . கல்விக் கூடங்களில் கல்வி பெற்று வரும் மாளுக் கனே வளரும் ஒரு மரத்திற்கு ஒப்பிடலாம். மரத்தின் வாழ்க்கை இரண்டு பிரிவினையுடையது ; தான் பலன் கொடுப்பதற்கு முன் தன்னைச் சரியான நிலைக்கு அமைத் துக் கொள்ளும் தனிவாழ்வு, தக்க வளர்ச்சியடைந்த பிறகு பிறருக்குப் பலனைத் தந்து வாழும் பொது வாழ்வு ஆகி யவை அவை. தான் நல்ல வளர்ச்சியடையும் வரை மரம் பலன் தருவதில்லை; நல்ல முழுவளர்ச்சியும் அடைந்த பிறகுதான் அதன் நிழல்கூடப் பிறருத்குக் கிடைக்கின்றது. தனி வாழ்வில் மரம் தன்னை வளர்த்துக் கொள்வதில் மட்டிலும் கண்ணும் கருத்துமாக இருந்து வருவதும், தான் நன்ருக வளர்ந்த பிறகு தான் பிறருக்குப் பலன் தருவதும், கல்விக் கூடங்களில் பயின்று வரும் மாணுக்கனுக்கு நல்ல படிப்பினைகளாக உதவுகின்றன. தாவர உலகில் மரத்தின் வளர்ச்சிக்கும் மானிட உலகில் மாணுக்கனின் வளர்ச்சிக்கும், சிந்தித்துப் பார்த்தால், யாதொரு வேற்றுமையும் இருத்தல் முடியாது. மரம் வளரும்பொழுது தோட்டக்காரன் தரும் உரத்தையும் இயற்கையாகப் பூமியில் கிடைக்கக் கூடிய சத்துக்களேயும் தேவையான அளவு ஏற்று வளர்ச்சியடைகின்றது. அது போலவே, மாணுக்கனும் கல்விக் கூடங்களில் ஆசிரியன் அளிக்கும் கருத்துக்களையும் நூலகத்தின் மூலம் பெறக் கூடிய கருத்துக்களையும் உளங்கொண்டு தன்னை எல்லாத் துறைகளிலும் தயாராக்கிக் கொள்ள வேண்டும்.இதுதான் மாளுக்கனின் தனிவாழ்வு. மரம் முழுவளர்ச்சியடையும்