பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளரும் பயிர் 175 AAAAAA AAAA MAA ASASASA AAAMAMMeAMS MM AAAA SAAAAA SAAAAA MAS AeeeAMeMAMAMAe --> அடைவர் என்ற உண்மையை இந்த எடுத்துக்காட்டால் தெளிய வைக்கின் ருர்.

  • வெள்ளத் தனைய மலர் நீட்டம்; மாந்தர்தம்

உள்ளத் தனைய(து) உயர்வு.”* என்ற குறள் இப்பேருண்மையை மக்கட் கூட்டத்திற்கு எடுத்துரைத்துக் கொண்டுள்ளது. நல்ல கருத்துக் களுக்கு ஆயுள் வரையறை கூட உண்டா ? அவை என்றும் இருக்கக்கூடிய சாகா வரம் பெற்றவை அல்லவா ? இல்லாவிட்டால் இயேசு மகான், புத்தர் பிரான், ஆதிசங்கரர், திருவள்ளுவர் போன்ற பெரியார் களின் கருத்துக்கள் இன்றளவும் காலத்துக்கேற்றவாறு புதுப் பொருள்களைத் தோற்றுவித்துக் கொண்டு என்றும் மார்க்கண்டேயமாக நிலத்திருக்க முடியுமா ? ஆகவே, வளரும் பயிர்களாகிய வருங்கால மக்க ளாகும் மானுக்கர்களும், வளர்க்கும் பொறுப்பிலிருக்கும் ஆசிரியர்கள், பெற்றேர்கள், பள்ளி ஆட்சியினர் ஆகி யோரும், தத்தம் கடமைகளில் வழுவாது காரியங்களைச் செய்து வருவார்களேயானல், வருங்கால மனித சமூகம் செம்மையுற அமையும் ; மக்களும் வையத்தில் வாழ் வாங்கு வாழ்ந்து நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருமை யளிக்கக் கூடிய வண்ணம் உயர்வு அடைவர். இவை யெல்லாம் சரிவர நடைபெறுமாறு ஆட்சியிலிருக்கும் கல்வி அமைச்சர் பொறுப்பேற்றுச் செய்தால் அவரை இன்றைய சமுதாயம் பாராட்டுவதுடன், வருங்காலச் சமூகமும் பெரிதும் பாராட்டும். வருங்காலச் சமூகத்தின் அமைப்பு இன்றைய கல்வி அமைச்சரின் கையில்தான் உள்ளது என்று சொன் குலும் அது மிகையாகாது. 8. குறள்-595.