பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிதையும் கற்பனையும்

11


கருவூலமாகவும் இன்றியமையாததாகவும் உள்ளது என் பது பெறப்படுகின்றது. தனிப்பாடல்களாக இருப்பினும் சரி, பெருங்காவியமாக இருப்பினும் சரி, நாடகம் அல்லது சிறுகதையாக இருப்பினும் சரி, கற்பனைப் பண்பு அனைத்திற்குமே இன்றியமையாதது. உணர்ச்சிகளின் நிலைக்களனாக எழுதப் பெறும். எல்லாவகை இலக்கியங்களுக்குமே கற்பனையாற்றல் மிகமிக அவசியமாகும்.

கற்பனையைப்பற்றி முடிந்த முடிபாக இதுகாறும் ஒருவரும் வரையறுத்துக் கூறவில்லை; கூறமுடியும் என்றும் நமக்குத் தோன்றவில்லை. கற்பனையாற்றல் இன்னது என்பதை சொற்களால் எல்லைகட்டி காட்ட இயலாது. என்ற ஒரு சொற்றொடரைக் கொண்டே மனத்தில் தோன்றும் பல்வேறு நிலைகளையும் குறிக்கின்றோம். இரஸ்கின் என்ற மேனாட்டுத் திறனாய்வாளர் “கற்பனையின் தத்துவம் அறிவுக்கு எட்டாதது; சொற்களால் உணர்த்த முடியாதது; அதன் பலன்களை மட்டிலும் கொண்டே அஃது அறியப்படுவதொன்றாகும்”[1] என்று குறிப்பிடுகின்றார். இக்கூற்று எல்லாவித திறன்களுக்குமே பொருந்தக்கூடும்; ஆனால் அவற்றின் தன்மைகளைத் தெளிவாக உணர்த்துவது மிகவும் கடினம். அத்திறன்களால் விளையும் பலன்களைக்கொண்டு ஒருவாறு அவற்றின் தன்மைகளை வரையறை செய்ய இயலும். இத்துறையில் நாட்டம் செலுத்திய வின்செஸ்டர் என்ற திறனாய்வாளர் கற்பனையாற்றலை மூன்று விதமாக வரையறை செய்கின்றார்.

முதல் வகை : பறவை முகத்துடனும் நாயின் உடலுடனும் கூடிய ஒரு விலங்கை மனத்தில் உருவகித்துக் கொள்ளுதல், ஒரு சிற்பி கல்லில் சமைக்க வேண்டிய


  1. The essence of imaginative faculty is utterly mysterious and inexplicable, and to be recognised in its effect only’ —Ruskin.