பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

காலமும் கவிஞர்களும்


இன்னொரு காட்சி : இராமனது அம்பு தன் மார்பில் பாய்ந்தவுடன் அதனைச் சக்கராயுதமோ சூலமோ என் ரெல்லாம் அயிர்த்து இறுதியில் அதைச் சரம் என்று அறிகின்றான் வாலி. வாலாலும் தாள்களாலும் அதனைப் பற்றிவாங்கி ‘இராமன்’ என்றபெயர் அதில் பொறிக்கப் பெற்றிருப்பதைக் காண்கின்றான். இதனைக் கம்பநாடன்,

“மும்மைசால் உலகுக் கெல்லாம்
மூலமந் திரத்தை முற்றும்
தம்மையே தமர்க்கு நல்கும்
தனிப்பெரும் பாதத்தைத் தானே
இம்மையே எழுமை நோய்க்கும்
மருந்தினை ‘இராமன்’ என்னும்
செம்மைசேர் நா மந் தன்னைக்
கண்களில் தெரியக் கண்டான்”

[1]

என்று கூறுகின்றான். இராமன் என்ற சொல்லைக் கூறும் பொழுதே கம்பன் மனத்தில் பல்வேறு கருத்துக்கள் ஒருங்கே எழுகின்றன. பிறிதோர் இடத்தில்.

“நினையும் தேவர்க்கும் நமக்கும் ஒத்
தொருநெறி நின்ற
அனகன் அம்கணன் ஆயிரம்
பெயருடை அமலன்.”

[2]

என்ற இராமனைக் குறிப்பிடும்பொழுதும் இராமனைப் பற்றிக் கம்பன் கொண்டுள்ள கருத்துக்கள் ஒருங்கு வெளிப்படுகின்றன.

பிறிதொரு காட்சி : வாசவதத்தையின் அழகினைக் குறிந்துக் கொங்குவேளிர் கூறுவது:

யாற்றற லன்ன கூந்தல்;
யாற்றுச் சுழியெனக் கிடந்த குழி நவில் கொப்பூழ்;
வில்லெனக் கிடந்த புருவம் ; வில்லின்


  1. 1 கம்பராமாயணம்-வாலி வதை-71 6 கம்பராமாயணம் - சித்திரகூட-1. '
  2. கம்பராமாயணம் -சித்திரகூட-1