பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

காலமும் கவிஞர்களும்



இரண்டாம் வகை : இவற்றைத் தவிர வேறுவிதமாக நிகழும் செயல்களும் கற்பனை என்ற பெயர்களால் வழங்குகின்றன, ஒரு சிலவற்றை ஈண்டுக் காண்போம்.

பறவைகள் குஞ்சு பொறிப்பது நாள்தோறும் நாம் காணும் காட்சி. இதனை அடிக்கடிக் கண்ணுறும் நம் உள்ளத்தில் ஒருவிதமான புதிய கருத்தும் எழுந்ததில்லை ; எழுவதுமில்லை. வள்ளுவப் பெருமானின் கருத்தில் அக்காட்சி எண்ண கருத்தினை எழுப்பிவிட்டிருக்கின்றது. பாருங்கள்,

“குடம்பைத் தனியொழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.”

[1] அக்காட்சியும் மக்கள் இறந்துபடும் நிகழ்ச்சியும் ஒன்று சேர்ந்து உயர்ந்ததோர் உண்மையையல்லவா விளக்கி நிற்கின்றன ? இதில் பறவை குஞ்சு பொறிக்கும் காட்சி கவிஞனது உணர்ச்சியைத் தூண்டவில்லை. ஆனால் அவன் உள்ளத்தில் படிந்துகிடந்த ‘நிலையாமை’ என்ற உணர்ச்சியே பறவை குஞ்சு பொறிக்கும் காட்சியை நினைப்பூட்டியது. அவ்வுணர்ச்சிதான் தனக்குப் பொருத்தமான பிறிதொரு காட்சியை நினைவுக்குக் கொணர்ந்து முன்னரே படிந்திருந்த உணர்ச்சியைக் கலையாக மலரச் செய்தது. புற உலகில் காணும் நிகழ்ச்சி அகத்தில் அடங்கிக் கிடக்கும் உணர்ச்சியைத் தூண்டுகின்றது என்றாலும், பெரும்பாலும் உள்ளநுபவமே (Inner experience) அத்தகைய உணர்ச்சியைக் கிளர்ந்தெழச் செய்கின்றது என்று சொல்லலாம். எனவே, கற்பனையாற்றலைத் தூண்டுவதற்கு உள்ளத்தில் அடங்கியிருக்கும் உள்ள நுபவமே தூண்டு கோலாக அமைகின்றது என்பது தெளிவாகின்றது. இத்தகைய கற்புனையைத்தான் வின்செஸ்டர் ‘இயைபுக்


  1. குறள் 338