பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலமும் கவிஞர்களும் میم مسی » می காரிருளில் கானகத்தில் காதலியை நளன் விட்டே கிண்பொழுது. துயிலெழுந்த தமயந்தி கணவனேக் காணுது வாடுகின்ருள். இச் சோகக் கட்டத்தை நீட்டிக்க விரும்பாத கவிஞன் புகழேந்தி விடியும் தருணத்தைக் காட்டுகின்ருன். கோழி கூவுகின்றதை, "தையல் துயர்க்குத் தரியாது தன் சிறகாம் கையால் வயிறலைத்துக் காரிருள் வாய்-வெய்யேரனே வாவுபரித் தேரேறி வாவென்று அழைப்பனபோல் கூவினவே கோழிக் குலம்.' என்று காட்டுகின்ருன். கோழிகள் சிறகுகளால் மார்பில் அடித்துக் கொள்ளுகின்றன என்பதும். தமயந்தியின் துயரை நீக்க வருமாறு கதிரவனே நோக்கிக் கூவுகின்றன என்பதும் கவிஞனின் புனைந்துரைகள். அவன் அச்சம யம் உணர்ந்த உணர்ச்சி இப்படிக் கவிதை வடிவில் வெளிவந்துள்ளது. கலிங்கத்துப் பரணியில் வரும் சில காட்சிகளைக் காண்போம் : மகளிர் நடந்துவருங்கால் சிலம்பொலிக் கின்றது. இதைச் செயங்கொண்டார், ‘உபய தனமசையில் ஒடியும் இடைநடையை ஒழியும் ஒழியுமென ஒண்சிலம்பு அபயம் அபயமென அலற நடைபயிலும் அரிவை மீர்கடைகள் திறமினே.”* என்று கூறுவர். மகளிர் நடக்குங்கால் கொங்கைகளின் பாரம் தாங்கலாற்ருது அவர்கள் நுண்ணிய இடை முறிந்து போகுமாதலால், அவர்கள் காலிலுள்ள சிலம்பு கள் அபயம், அபயம் என ஒலித்து நடையை ஒழிய வேண்டும் என்று முறையிடுகின்றனவாம்.

  • நளவெண்-283 * கலிங்-தாழி. 58