பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் கற்பனையும் 25 'தரைமகள் தன் கொழுநன்றன் உடலந் தன்னைத் தாங்காமல் தன்உடலால் தாங்கி விண்ணுட்டு அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம் ஆவிஒக்க விடுவாளேக் காண்மின் காண்மின்.' என்பது போர்களத்தில் காணும் ஒரு நிகழ்ச்சி ; போர்க் களத்தில் மகள் ஒருத்தி தன் கணவனுடன் உயிர்துறத் தலைக் கூறுவது. இதில் கவிஞன் கற்பனை செய்திருப் பது மிகவும் இன்பம் பயத்தலே அறிக. காஞ்சிமா நகர் தேவர் உலகைவிட அழகால் சிறந் துள்ளது என்பதைச் சிவஞான முனிவர் ஓர் அழகான கற்பனை மூலம் விளக்குகின்ருர். காஞ்சியம்பதியும் தேவ ருலகும் கீழும் மேலுமாக நிற்கும் இயற்கைக்கு அவரால் பிறிதொரு காரணம் கற்பிக்கப்பெறுகின்றது. 'கச்சிமா நகர்ஒர் தட்டும் கடவுளர் உலகோர் தட்டும் வைச்சு முன் அயனர் தூக்க மற்றது மீது செல்ல நிச்சயம் முறுகித் தாழ்ந்து நிலமிசை விழும் இவ் ஆரை இச்சகத் தூர்களோடு எண்ணுதல் மடமைப் பாற்றே’** என்ற செய்யுளில் கவிஞன் காட்டும் கற்பனைன்ய எண்ணி மகிழ்க.. காஞ்சியில் மற்ருேரிடத்தில் சைவ மடங்களில் உள்ள துறவியர் மூக்கில் விரலை வைத்துக் கொண்டு நிட்டையில் இருந்ததாகக் கூறும் பாடலும் கற்பனை செறிந்து காணப்பெறுகின்றது. 'காமனே முனிந்து நெடுஞ்சடை தரித்துக் கவின் றகல் லாடைமேற் புனைந்து 29 தாழிசை-58 * தாழிசை-483. * காஞ்சிபுரா-திருநகரப் படலம்,