பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிதையும் கற்பனையும் 27. காட்டும் கதிரவன் மறைவு சுவையின் கொடுமுடியையே எட்டிப் பிடித்துவிடுகின்றது. பாரதிதாசன் காட்டும் முழுமதியக் காட்சியைக் காண்போம். "நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து நிலாவென்று காட்டுகின்ருய் ஒளிமு கத்தை கோல முழுதுங் காட்டிவிட்டால் காதற் கொள்ளேயிலே இவ்வுலகம் சாமோ ? வானச் சோலேயிலே பூத்ததனிப் பூவோ நீ தான் ! சொக்கவெள்ளிப் பாற்குடமோ ? அமுத ஊற்ருே ? காலேவந்த செம்பரிதிக் கடலில் மூழ்கிக் கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ!' இயற்கையாகிய பெண் தன் உடலையெல்லாம் நீலவான மாகிய ஆடைக்குள் மறைத்துக்கொண்டு முகத்தைமட்டி லும் காட்டுகின்ருளாம் ; முழுவடிவையும் காட்டி விட்டால் இவ்வுலக மக்கள் காதற்கொள்ளையில் இறந்து விடுவார்களாம். மற்றும் கவிஞனுக்கு குளிர்மதி சோலை யிலே பூத்த தனிப்பூவாகவும், சொக்க வெள்ளிப்பாற்குட மாகவும், அமுத ஊற்ருகவும், காலேயில் தோன்றிய கதி ரவன் கடலில் மூழ்கி எழுந்ததால் குளிரடைந்த ஒளிப் பிழம்பாகவும் தோன்றுகின்றது. இந்த எடுத்துக்காட்டுக்களேயெல்லாம்ஆராய்ந்தால் கவிஞர்கள் இயற்கையை அப்படியே வருணிக்கவில்லை யென்றும், காணுங் காட்சிகளைப் பொருளுணர்வு தோன்றச் சொல்லுகின்றனர் என்றும் தெரிகின்றது. கண்டதைக் கண்டவாறு சொல்வது அவர்கள் இயல் பன்று. காணும்பொழுதும் உள்ளத்தில் எழும் உணர்ச்சி யுடன் கலந்து காட்சிகளில் சில பகுதிகளை மட்டிலும் தருகின்றனர். அவ்வாறு தருகின்றபொழுது ஏதோ ஒரு வித நோக்கத்தை மட்டிலுந்தான் காட்டுகின்றனர். இவ் 28 பாரதிதாசன் கவிதைகள் : புரட்சிக்கவி.