பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயற்கைக் கூத்து

35


 இக்காட்சிகளைக் கண்டுகளித்த கம்பன் நம்மையும் களிக்க வைப்பதற்குப் புனைந்த சொல்லோவியம்:

"தண்டலை மயில்க ளாடத்
தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக்
குவளைகண் விளித்து நோக்கத்
தெண்டிரை எழினி காட்டத்
தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம் வீற்(று) இருக்கு மாதோ!"

*

(தண்டலை-சோலை; கொண்டல்கள்-மேகங்கள்; முழவின்-மத்தளம் போல; ஏங்க-ஒலிக்க; தென் திரை-தென் டிரை-தெளிவான அலை; எழினி-நாடகத் திரைச்சீலை; தேம்பிழியாழின்-இனிமையுள்ள தேன் போன்ற இனிய யாழ் ஒசை.)

இன்னும் ஒரு காட்சியைக் காண்போம். இது பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டக் கூறவல்ல சேக்கிழார் பெருமான் காட்டுவது ; இது கார்காலத்தில் மாலை நேரத்தைச் சித்திரிப்பது.

'நீலமா மஞ்ஞை ஏங்க நிரை கொடிப் புறவம் பாடக் கோலவெண் முகையேர் முல்லைக் கோபம்வாய் முறுவல் காட்ட ஆலுமின் இடைசூழ் மாலைப் பயோதரம் அசைய வந்தாள் ஞாலநீ டரங்கில் ஆடக் காரெனும் பருவ நல்லாள்.” **

(மஞ்ஞை-மயில்; புறவம்-புறா: பயோதரம்-கொங்கை)


  • கம்பரா. நாட்டுப் படலம்-செய்:4
    • பெரியபுரா-ஆனாய நாயனார்-19