பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் பாஞ்சாலி சபதம் 合量 ஊதும் சகுனியும் திருதராட்டிரனிடம் துரியோதன னின் உட்கிடக்கையைச் சொல்லும்பொழுது, " நீபெற்ற புத்திரனே யன்ருே ? மன்னர் நீதி யியல்பி லறிகின்ருன்,-ஒரு தீபத்திற் சென்று கொளுத்திய-பந்தம் தேசு குறைய வெரியுமோ ?--செல்வத் தாபத்தை நெஞ்சில் வளர்த்திடல்,-மன்னர்

  • சாத்திரத் தேமுதற் சூத்திரம் ;-பின்னும் ஆபத் தரசர்க்கு வேறுண்டோ-தம்மில்

அன்னியர் செல்வ மிகுதல் போல் ??? என்று வரும் பகுதியில் துரியோதனனின் அரசியல் தத்துத்தின் வாடை வீசுகின்றது. வில்லி திருதராட்டிரனேக் கிட்டத்தட்ட வயது சென்ற ஓர் அயோக்கியனுகவே காட்டுகின் ருர் என்று சொல்லவேண்டும். விரகினுக்கோர் வீடுபோல்வான்’ என்பது வில்லி காட்டும் திருதராட்டிரனது ஓவியம். இங்கு, தந்தையைக் கேட்காமலேயே துரியோதனன் மண்டபம் சமைத்து விடுகின்றன். கட்டியபின் தன் மனக் கருத்தைத் தந்தையிடம் வெளியிடுகின்ருன், அதனைக் கேட்ட தந்தை மகிழ்வடைவதுபோல் காட்டு கிருர் வில்லி. மேகன்மொழி நயந்து கேட்டு வாழ்வுறு தந்தை தானும் மிக நயந்துருகி நல்ல விரகினுல் வெல்ல லுற்றீர் அகநெடும் போர் செய்தாலும் ஐவரை அடக்கொணுது சகுனியை யன்றி வேருர் தரவல்லார் தரணி என்ருன்.? என்று கூறும் தந்தையைக் காண்கின்ருேம். இங்குச் சகு னியின் சூழ்ச்சியைத் திருதராட்டிரன் மெச்சுகின்ருன். மைந்தன் கருத்துப்படியே பாண்டவர்களேக் கூட்டி வருமாறு விதுரனே இந்திரப் பிரத்தத்துக்கு அனுப்பி 7 வில்லிபாரதம்-சூதுப்போர்-49