பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் பாஞ்சாலி சபதம் 59 SAASAASAASAASAASAASAASAASAASAA AAASA SAASAASSAAAASA SAAAAA AAAA AMSAASAASAASAAAS AAAAS SAAAAA AAAA AAAA AAAA AAAA AAAAMMMAMAMASAMAMMAMMS MS MS கொங்கையினுள் என்றவையும், அத்தினபுரத்துப் பெண்களைச் சுட்டும் மலர்விழிக் காந்தங்கள்’ என்பது வும் நல்ல சான்றுக்கள். காப்பியத்தின் நடை கரடு முரடாய்த்தான் இருக்க வேண்டும் என்று கருதும் அன்பர்கள் பாஞ்சாலி சபதத்தின் சிறப்பை அறிய முடியாது. இம்மாதிரியான புதிய யாப்புக்களேக் கையாண்ட பிறகுதான் பாமர மக்கள் மனத்திலும் இலக்கிய வானம் கவிந்து அவர்களும் கவிதைகளேச் சுவைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது ; ஏற்பட்டு வளர்ந்தும் வருகின்றது. இந்த முறையில் பாரதி தமிழ் இலக்கிய உலகில் ஒரு புதிய சகாப்தத்தையே தொடக்கி யுள்ளார் என்றுகூடத் துணிந்து கூறிவிடலாம். தண்டியாசிரியர் கூறும் இலக்கணப்படிப் பார்த் தாலும் பாரதியின் பாஞ்சாலி சபதம்’ ஒரு காப்பியம் என்றுதான் சொல்லவேண்டும். அவர் பெருங் காப்பி யத்திற்கு இன்றியமையாதவை என்று கூறும் கடவுள் வாழ்த்து, தன்னிகர் இல்லாத் தலைவன் அல்லது தலைவி, நாடு நகர் இவற்றின் வருணனைகள், சூரியன் சந்திரன் இவற்றின் காட்சிகள், மந்திரம், தூது, செலவு, இகல் போன்ற கூறுகள் முதலியவை யாவும் பயின்று சருக் கங்களாகக் காப்பியம் ஆக்கப் பெற்றுள்ளது. காப்பி யத்தை ஒருமுறை பயில்வோர் இவ்விலக்கணங்கள் யாவும் செம்மையாக அமைந்திருப்பதை அறிவர். எந்த முறையில் பார்த்தாலும் பாஞ்சாலி சபதம்’ ஒர் உயர்ந்த காப்பியம் என்ற உண்மை எளிதில் புலனுகும். எவ்வித உளத் தடிப்பும் இன்றிக் காப்பியத்தைச் சுவைப்பவர்தாம் பாரதியின் பேராற்றலை உணர முடியும். பரரதி கையாண்டிருக்கும் சில அபூர்வ கற்பனைகள் கல்விச் செருக்குடைய புலவர்களையும் களிப்பிக்குமாறு அமைந்திருக்கின்றன. இனிய, எளிய, சொற்களேப் பயன்படுத்திக் கவிதைகளேச் சுவையூட்டுவதில் பாரதி