பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியின் பாஞ்சாலி சபதம் 63 திரெளபதியை மன்றுக்கு அழைத்துவரும்படி சொல்லிய பொழுது சகத்தில் உண்ட்ான குழப்பத்தை வருணிக்கும் பகுதியிலும் இத்தகைய காட்சிகளைக் காணலாம். இப் பாடல்கள் யாவும் படிக்கப் படிக்கத் தெவிட்டாத சுவை தருபவை. சாதாரண மக்களின் பேச்சுக்களில் வரும் சொற் களைக்கூட கையாண்டு சுயம்புவான இலக்கியச் சுவை கொப்புளிக்கும்படி செய்துள்ள பல இடங்களைக் காப்பி யத்தில் காணலாம். அத்தினபுரத்து வீரர்களைப்பற்றிக் கூறும், கரி, நூறினத் தனிநின்று நொறுக்க வல்லார்’ என்ற வரியும், திருதராட்டிரன் சகுனியைக் கடிந்து கூறும்பொழுது, - வெறும் நொள்ளேக் கதைகள் கதைக்கிருய்,-பழ நூலின் பொருளைச் சிதைக் கிருய்’’. என்று சொல்லும் வரிகளும், தந்தையின்மீது சினங் கொண்டு துரியோதனன் கூறும், - கெட்ட வேம்பு நிகரிவ னுக்குநான்-சுவை மிக்க சருக்கரை பாண்டவர் ;’’ என்ற வரிகளும், விதுர&னப் பாண்டவர்கள் வரவேற்ற பகுதியில் வரும் 'மதுர மொழியில் குசலங்கள் பேசி என்ற வரியும் இதற்குச் சான்றுகளாக உள்ளன. இம் மாதிரியான வரிகள் பல சூதாட்ட வருணனைப் பகுதி யிலும் இருக்கின்றன. துரியோதனன் விதுரனே ஏசிப் பேசும் பகுதியில் வரும், 'நன்றி கெட்ட விதுரா-சிறிதும் நாண மற்ற விதுரா தின்ற உப்பினுக்கே-நாசந் தேடுகின்ற விதுரா!'