பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. திருவள்ளுவர் கண்ட நாடு SJJJA AAAA AAASA SAASAASAASAASAASAASAASAASAAMMAAA AAAA AAAA AAASS ہم بہ-بم...۔۰۰-۔-------- ஒரு நாடு இப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றி அறிஞர்களும் கவிஞர்களும் கனவுகள் கண்டிருக் கின்றனர்; காண்கின்றனர். இவ்வுலகிலுள்ள இலக்கியங் களைய்ம் உலக வரலாற்றையும் புரட்டிப் பார்த்தால் இவ்வுண்மை விளங்காமற் போகாது. கவிஞர்கள் காணும் நாட்டைப்பற்றிய கருத்துக்களில் பெரும்பாலும் நமக்கோ அவற்றைப் படிப்போருக்கோ கருத்து வேறு பாடுகள் இருத்தல் முடியாது; அத்தகைய மேதைகள் கவிஞர்கள். கம்பன், வள்ளுவன், ஷேக்ஸ்பியர் போன்ற மகாமேதைகள் காணும் நாட்டைப் பற்றி இன்றும் புலவர்கள் புகழ்கின்றனர்; அறிஞர்கள் மெச்சு கின்றனர்; பொதுமக்களும் பாராட்டுகிருர்கள். காலத் தாலும் இடத்தாலும் பிரிக்கப்பட்டிருந்தாலும் இவர்களே இவ்வுலகம் பாராட்டத்தான் செய்கின்றது. இவர்களு டைய கருத்துக்கள் கால வெள்ளத்தை எதிர்த்துச் செல்லும் பேராற்றலைப் பெற்றுள்ளன. இவர்கள் கருத் துக்கள் எல்லாக் காலத்திற்கும் எல்லா நாட்டினர்க் கும் பொருந்துவதாக உள்ளன. ஆல்ை, அறிஞர்களும் அரசியல் அறிஞர்களும் காணும் நாடு திறயைப் பெறுகின்றது; அதனே அவர் களோடு ஒத்த மனப்பான்மையும் கொள்கையினை யும் கொண்டவர்கள் மட்டும் புகழ்கின்றனர்; பாராட்டு கின்றனர். ஆல்ை, மாருன கருத்துக்களே யுடைவர்கள் வெறுக்கின்றனர்; எதிர்க்கின்றனர்; தூற்றுகின்றனர். தவிர, இவர்களுடைய கருத்துக்கள் எல்லாக் காலத்திற் கும் எல்லா நாட்டினர்க்கும் பொருந்துவதும் இல்லை. 47–6