பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கண்ட நாடு 75 பொழுதுதான் நாட்டின் செல்வநிலை உயரும். உடல் நலத்திற்கு வாழும் நில நலன், பொருள் நலன் முதலி யன வேண்டுமல்லவா ? நல்ல விளைவுதான் ஒரு நல்ல நாட்டிற்கு அளவு கோல். உற்பத்திப் பொருள் பெருகிளுல்தான் ஒரு நாடு வளம்பெறும்; நாட்டின் செல்வநிலையும் உயரும். பிணியின்மை, செல்வம், விளைவு இவற்றைப் பெற்ற மக்கள் இன்ப வாழ்வு வாழ்தல் வேண்டும். இன்பத்தைப் பெற்ற மக்களுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டாமா ? இதை ஏமம்’ என்ற சொல்லால் குறிப்பிடுவர் வள்ளுவர். வெறும் கருவி களவு மாநாடு கூட்டி உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதலால் பயன் இல்லை. பகையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பெறும் பாதுகாவ லால் பயன் ஒன்றும் இல்லை; அறத்தின் வழி நின்று, அன்பின் அடிப்படையில் பாதுகாவல் அமைதல் வேண்டும். ஆகவே, வள்ளுவர், "பிணியின்மை செல்வம் விளை(வு) இன்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்(கு) இவ் வைந்து”.* என்று நாட்டின் அணிகளை வகுத்துக் காட்டுகின்ருர். ஒரு நாடு சிறக்க வேண்டுமானுல் குறையாத விளை பொருள் வேண்டும் , அவற்றை எல்லோரும் பெற்று துகரச் செய்யுமாறு அறத்தைப் போற்றும் அறவோர் வேண்டும்; குற்றம் குறையில்லாத செல்வர்கள் அந் நாட்டில் இருத்தல்வேண்டும். இதனே, 'தள்ளா விளேயுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு.' என்று கூறுகின்ருர் வள்ளுவர். குறையாத விளே பொருள் களே உற்பத்தி செய்யவல்ல நாட்டிற்கு உயிர்நாடி போன்ற நல்ல உழவர்கள் அந்நாட்டில் வாழவேண்டும். என்னென்னவிதமாக வெல்லாம் மக்கள் வருந்திப் 9. குறள்-738 10. குறள்-731