பக்கம்:காலமும் கவிஞர்களும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவள்ளுவர் கண்ட நாடு 79 SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS A S A S A S A S A S A S A S A S A SAS SSAS A SAS SSASMAAA AAAA SAAAAASA SAASAASAASAASAASAASAASAA உணவுப் பொருள் போதாக் குறையால் வரும் பசிக் கொடுமை ஒரு நாட்டில் இருக்கக்கூடாது. அடுத்தது நோய் ; முதுமையாலும் தளர்ச்சியாலும் இயல்பாக உடலுக்கு வரும் நோய்கள் போக, இளமையில் நோய் கள் வருவதும், அவை ஓயாமல் வந்து தீராமல் நிற்பதும், தொத்து நோய்களாகப் பெருகுவதும் நாட்டின் பெருமை யைக் குறைக்கும். தீக்காற்றிலுைம், குளிலுைம், வெப்பத்திலுைம் இயற்கை நிலை மாறுபடுவதலுைம் நோய் உண்டாகின்றது. காரணமின்றி நோய் வராது.

  • நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய் நாடி வாய்ப்பச் செயல்' என்று வள்ளுவர் கூறுகிறபடி நோய்களைப் போக்குதல் வேண்டும். மக்கள் உடல் நலனைப் பாதுகாப்பதற் கென ஓர் அமைச்சர் இருந்து செயலாற்றவேண்டும். நாட்டில் பல இடங்களில் மருத்துவ நிலையங்கள் நிறுவப் பெற்று ஏழை மக்கள் எளிதில் அவற்ருலாய பயனை அடைய வழிகள் அமைத்தல் வேண்டும். மூன்ருவது பகை ; கருத்து வேறுபாட்டாலும், உரிமைப் போராட் டத்தாலும் எந்த நாட்டிலும் எதிர்ப்புக்கள் இருக்கத் தான் செய்யும் ; அவை அறிவு வளர்ச்சிப் பாதையிலும் அரசியல் முற்போக்கிலும் சென்று மக்களைத் திருத்தி ஆக்க வேலை செய்யும் அளவில் நிற்காமல், அவர்களைக் கெடுக்கும் அழிவு வேலைக்குத் திருப்புமால்ை அது நாட்டிற்குப் பெரியதோர் இழுக்காகும். அன்றியும், அண்டை நாட்டினரின் பகை ஏற்படாதவாறு பாது காத்தல் வேண்டும். ஏட்டளவில் நேச தேச ஒப்பந் தங்கள்’ செய்துகொண்டு செயலில் படை பலத்தைப் பெருக்கிக் கொண்டு வஞ்சகம் புரிவதால் பயன் ஒன்றும் இல்லை. அறத்தையும் அன்பையும் புறக்கணித்துப் 17. குறள்-948